வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

சிவகார்த்திகேயன் ஆசையில் விழுந்த மண்.. ரஜினிக்கு வில்லனாக சிஷ்யனை லாக் செய்த லோகேஷ்

Villain committed to Rajini’s 171st film: ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளிவந்த லால் சலாம் படம் கலையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இதற்கிடையில் ரஜினி அவருடைய 170 ஆவது படமான வேட்டையன் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முக்கால்வாசி முடிந்து நிலையில் கூடிய விரைவில் இப்படம் திரைக்கு வந்துவிடும். இதற்கு அடுத்தபடியாக ரஜினி அவருடைய 171 படத்திற்கும் இப்பவே அஸ்திவாரத்தை போட்டுவிட்டார்.

அதாவது ரஜினி நீண்ட நாளாக ஆசைப்பட்ட லோகேஷ் இயக்கத்தில் நடிக்கப் போகிறார். தற்போது இதற்கான பேச்சுவார்த்தைகள் அனைத்தும் போய்க்கொண்டிருக்கிறது. அந்த வகையில் இதில் ரஜினியின் வில்லனாக சிவகார்த்திகேயன் நடிக்கப் போகிறார் என்று தகவல் வெளியானது. ஏற்கனவே சிவகார்த்திகேயனும், ரஜினி படத்தில் எப்படியாவது நடித்து விடனும் என்று மிகப்பெரிய ஆசையை வைத்திருந்தார்.

அதற்கு ஏற்ற மாதிரி வாய்ப்புகள் அனைத்தும் கூடி வந்தது. ஆனால் இது பற்றிய விஷயங்கள் லோகேஷ் தரப்பில் இருந்து எந்த ஒரு கன்ஃபர்மேஷனும் வரவில்லை. அதனால் சிவகார்த்திகேயன் தன் ஆசைப்பட்டது நடக்காது என்று அவருடைய டிராக்கை மாற்றி வேற ரூட்டுக்கு போய்விட்டார். அதாவது தற்போது கமல் தயாரிப்பில் அமரன் படமும், அடுத்ததாக ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் ஒரு படத்தையும் பண்ணுவதற்கு தயாராகி விட்டார்.

Also read: கடைசியில ரஜினி தலையில் விழுந்த பழி.. சுக்குநூறாக உடைந்த ஐஸ்வர்யாவின் மனக்கோட்டை

ஆக மொத்தத்தில் சிவகார்த்திகேயன், ரஜினி படத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசையில் மண் விழுந்து விட்டது. இதனை அடுத்து லோகேஷ் ரஜினியின் 171 வது படத்திற்கு வில்லனை யாரை தேர்வு செய்திருக்கிறார் என்றால் ரஜினியின் சிஷ்யனாக இருக்கும் ராகவா லாரன்ஸ். ரஜினியின் வில்லன் ராகவா லாரன்ஸ் என்று சொன்னால் கூட கொஞ்சம் ஏற்றுக் கொள்ள மாதிரி இருக்கிறது.

ஆனால் ரஜினியின் வில்லன் சிவகார்த்திகேயன் என்று சொன்னால் மக்கள் எந்த அளவிற்கு வரவேற்பு கொடுப்பார்கள் என்ற சந்தேகம் இருந்தால் லோகேஷ் இந்த மாதிரி ஒரு முடிவை எடுத்திருக்கிறார். அந்த வகையில் ரஜினி, லோகேஷ் மற்றும் ராகவா காம்போ இணைந்து ஒரு பெரிய சம்பவத்தை செய்யப் போகிறார்கள். முக்கால்வாசி லோகேஷ் படத்தின் வில்லன் எப்படி இருப்பார்கள் என்றால் கொடூரமான வில்லனாக தான் இருப்பார்கள்.

அந்த வகையில் ராகவாவின் மிரட்டலான வில்லத்தனத்தை இதில் எதிர்பார்க்கலாம். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கப் போகிறது. மேலும் ரஜினியின் வேட்டையன் படப்பிடிப்பு இன்னும் ஓரிரு மாதங்களில் முடியப்போவதால், அடுத்து வருகிற மே அல்லது ஜூன் மாதங்களில் தலைவர் 171 வது படத்தின் படப்பிடிப்பு ஆரம்பிக்கப்படும்.

Also read: சிவகார்த்திகேயன் கிரீன் சிக்னல் காட்டியும் 3 வருஷத்துக்கு பின் டேக்ஆப் ஆன பிளைட்.. ரஜினிகிட்ட போய் வந்தும் கிடப்பில் போட்டது

Trending News