வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

பேராசையில் மொத்த கேரியரையும் இழந்த இயக்குனர்.. அஜித் முதல் கமல் வரை பல்சை பிடித்துப் பார்த்த பரிதாபம்

Ajith Director: எப்போதுமே சின்ன மீனை போட்டு பெரிய மீனை பிடிப்பது தான் புத்திசாலித்தனம். அதை விட்டுவிட்டு பேராசையில் உடனடியாக மேலே பறக்க வேண்டும் என்று ஆசைப்பட்டால் இருப்பதையும் விட்டு நிற்கதியாக நிற்கும் நிலைமைதான் வரும். இந்த ஒரு விஷயம் யாருக்கு பொருந்தோ இல்லையோ இரண்டு படங்கள் மூலம் ஹிட் கொடுத்த இயக்குனர் ஒருவருக்கு நல்லாவே பொருந்தும்.

ஆரம்பத்தில் சினிமாவிற்குள் நுழைந்து எடுத்த இரண்டு படமும் பெரிய அளவில் ஹிட் ஆகிவிட்டது. யாருமே இப்படி ஒரு கதையும், விறுவிறுப்பையும் எதிர்பார்க்காத அளவிற்கு தரமான படத்தை கொடுத்தார். அதன் மூலம் மூன்றாவது படத்திலேயே பெரிய கூட்டணியுடன் இணைய வேண்டும் என்று பேராசை பட்டார். அந்த வகையில் அஜித்தை வைத்து ஒரு படத்தை பண்ணினார்.

ஆனால் இந்த படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெறாமல் போய்விட்டது. அந்த இயக்குனர் வேறு யாருமில்லை எச் வினோத் தான். மூன்றாவது படத்தில் பெரிய கூட்டணி உடன் இணைந்ததால் இவருடைய சுயமரியாதையை இழந்து நிற்கும்படியாக பரிதாபமான நிலைமை ஏற்பட்டு விட்டது.

Also read: ரீ-ரிலீஸ் ஆகும் அஜித்தின் 3 மெகா ஹிட் படங்கள்.. பில்லாவை பின்னுக்குத் தள்ளிய கேங்ஸ்டர் படம்

அதிலும் ஹீரோவுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அளவிற்கு அடிக்கடி கதையை மாற்றிக் கொண்டதால் என்னமோ நேர்கொண்ட பார்வை படம் கொஞ்சம் சொதப்பலாக முடிந்து விட்டது. இதனை தொடர்ந்து அடுத்து வந்த வலிமை படம் கலையான விமர்சனத்தை பெற்றது. ஆனால் கடந்த வருடம் வெளிவந்த துணிவு படம் தாறுமாறான வெற்றியை கொடுத்து விட்டது.

இதனால் இப்படியே அடுத்த படமும் பெரிய அளவில் கூட்டணி வைக்க வேண்டும் என்று எச் வினோத், கமலை நாடினார். அவரும் நாம் சேர்ந்து கூட்டணி வைத்துக் கொள்ளலாம் என்று வாக்குறுதி கொடுத்தார். ஆனால் தற்போது கமல், நடிப்பிலும் தயாரிப்பிலும் பிஸியாக இருப்பதால் இவரை கண்டு கொள்ளவே இல்லை.

ஆனாலும் எப்படியாவது கமல் அல்லது அஜித்தை வைத்து படத்தை பண்ண வேண்டும் என்று அவர்கள் பின்னாடியே எச் வினோத் சுற்றிக்கொண்டு வருகிறார். அவர்களும் இவரை எப்படி தட்டிக் கழிப்பது என்று தெரியாமல் இப்ப பண்ணலாம், அப்புறம் பண்ணலாம் என்று சாக்குபோக்கு சொல்லி வருகிறார்கள். ஆக மொத்தத்தில் தற்போது வரை எந்த நடிகரும் கமிட் ஆகாமல் நிற்கதியாக நிற்கிறார்.

Also read: கூட பிறந்த உடன்பிறப்புகளின் தோல்வியை தாங்க முடியாத 5  பிரபலங்கள்.. அஜித் கூட நடித்தும் அட்ரஸ் இல்லாம போன தம்பி

Trending News