வெள்ளித்திரையை விட சின்னத்திரை பிரபலங்களுக்கு தான் தற்போது ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். ஏனென்றால் வாரத்தில் ஆறு நாட்கள் எல்லா தொலைக்காட்சிகளிலும் சீரியல் தான் ஒளிபரப்பாகி வருகிறது. அதில் சன் டிவி மற்றும் விஜய் டிவி தான் டிஆர்பியில் முதல் 5 இடங்களை பெறுகிறது.
பெரும்பாலும் சன் டிவியில் எதிர்நீச்சல், சுந்தரி, ரோஜா, கயல் போன்ற தொடர்கள் டிஆர்பியில் இடம் பெறும். அதேபோல் விஜய் டிவியில் பாரதி கண்ணம்மா, பாக்கியலட்சுமி, பாண்டியன் ஸ்டோர்ஸ் ஆகிய தொடர்கள் டிஆர்பியில் வந்துவிடும். கடந்த 2018 இல் தொடங்கப்பட்ட சீரியல் நேற்றுடன் முடிவுக்கு வந்தது.
Also Read : அசீமை வைத்து ஹீரோவாக காட்டிக் கொள்ளும் விக்ரமன்.. சோசியல் மீடியாவில் கிழித்து தொங்கவிடும் ரசிகர்கள்
அதாவது சன் டிவியில் கிட்டத்தட்ட 4 ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வந்த தொடர் ரோஜா. இந்த தொடரில் சிபு சூரியன், பிரியங்கா நல்காரி, காயத்ரி, வடிவுக்கரசி, ராஜேஷ் போன்ற பல பிரபலங்கள் நடித்திருந்தனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இத்தொடரில் இருந்து சிபு சூரியன் விலகப்போவதாக அறிவித்தார்.
ஆனால் ரசிகர்கள் ரோஜா சீரியல் தொடரை விட்டு நீங்கள் போகக்கூடாது என வேண்டுகோள் வைத்ததால் அர்ஜுன் கதாபாத்திரத்தில் தொடர்ந்து நடித்து வந்தார். மேலும் அவரது மனைவியாக ரோஜா கதாபாத்திரத்தில் பிரியங்கா நடித்து வந்தார். மிகவும் விறுவிறுப்பாக ரோஜா தொடர் சென்று கொண்டிருந்தது.
Also Read : மண்டியிட்டு மன்னிப்பு கேட்ட பாரதி.. அய்யயோ! இனி கண்ணம்மா பெட்டி படுக்கையை தூக்கிக்கிட்டு ஊரு ஊரா நடப்பாரே
இந்த தொடர் டிஆர்பியில் எப்போதுமே நல்ல இடத்தை பெற்று வந்தது. இந்நிலையில் நேற்று இத்தொடரின் கிளைமேக்ஸ் காட்சி ஒளிபரப்பானது. இதில் ரோஜா மற்றும் அர்ஜுன் குழந்தைக்கு பெயர் சூட்டு விழா உடன் இத்தொடர் நிறைவு பெற்றது. அதாவது இந்த தொடர் ஆரம்பத்தில் முருகனுடன் தொடங்கப்பட்டது.
கடைசியாக அந்த குழந்தைக்கு வேலன் என்று பெயர் சூட்டி இருந்தனர். மேலும் இத்தொடரில் வில்லி இறந்தவுடன், குடும்பம் ஒன்று சேர்ந்து உள்ளனர். இத்துடன் தொடருக்கு சுபம் போட்ட முடித்து வைத்துள்ளனர். ரோஜா தொடரின் முடிவால் டிஆர்பியில் சன் டிவி பெருத்த அடி வாங்கும் என கூறப்படுகிறது.
Also Read : என்ன பாக்யா இது குடும்பமே இரண்டா கிடக்குது.. இதுல எலக்சன்ல நின்னு என்ன கிழிக்க போற