வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

வேணாம்பா உங்க ப்ராஜெக்ட்-ன்னு கமலுக்கு குட்பை சொன்ன இயக்குனர்.. பல்லை பிடித்து பார்த்த உலகநாயகன்

Actor Kamal: கமல் இப்போது நாலா பக்கமும் பம்பரமாக சுழன்று கொண்டிருக்கிறார். கடந்த வருடம் வெளியாகி பாக்ஸ் ஆபிஸை மிரட்டிய விக்ரம் படத்திற்கு பிறகு இதுவரை எந்த படமும் அவர் நடிப்பில் ரிலீஸ் ஆகவில்லை. அதனாலேயே தற்போது உருவாகி இருக்கும் இந்தியன் 2 படத்தை ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.

இது ஒரு புறம் இருக்க விஜய் டிவியில் உலக நாயகன் தொகுத்து வழங்க இருக்கும் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியும் பெரும் ஆவலை தூண்டி இருக்கிறது. இப்படி பரபரப்பாக இருக்கும் கமலால் பிரபல இயக்குனர் ஒருவர் உங்க சகவாசமே வேண்டாம் என்று கும்பிடு போட்டு ஓடி இருக்கிறாராம்.

Also read: முதல் நாள் முதல் ஷோவில் மண்ணை கவ்விய ரஜினி, கமலின் படங்கள்.. ஹைஃபை ஏற்றி படுதோல்வியான சம்பவம்

அதாவது கமல் இப்போது மூன்று இயக்குனர்களை டீலில் விட்டு வருகிறார். அதாவது கமல், மணிரத்னம் கூட்டணியில் உருவாக இருக்கும் படத்தின் அறிவிப்பு பல மாதங்களுக்கு முன்பே வெளியானது. அதை தொடர்ந்து வினோத் கூட்டணியில் உருவாகும் படம் பற்றிய அறிவிப்பும் சமீபத்தில் வெளியானது.

ஆனால் இந்த படங்கள் எப்போது தொடங்கும் என்ற சங்கதி தான் யாருக்கும் தெரியவில்லை. இதற்கு இடையில் மூன்றாவதாக இயக்குனர் மகேஷ் நாராயணனும் கமலுக்காக காத்திருக்கிறார். பிரபல மலையாள இயக்குனரான இவர் ஆண்டவருடைய தீவிர ரசிகர் ஆவார்.

Also read: கமலுக்கு உயிர் பயத்தை காட்டிய ரஜினி.. மனநோய் முத்தியவன் கூட மூணு நாள்கத்தி சண்டை போட முடியாது

அதன் காரணமாகவே இவர் கமலை வைத்து படம் இயக்குவதில் பெரும் ஆர்வம் காட்டி வந்தார். அதற்கு உலகநாயகன் தரப்பிலிருந்தும் சம்மதம் தெரிவிக்கப்பட்டது. அதை அடுத்து இந்தியன் 2 படப்பிடிப்பு முடிந்த கையோடு நம்முடைய படத்தில்தான் கமல் நடிப்பார் என்று மகேஷ் நாராயணன் மிகவும் எதிர்பார்த்து வந்தார்.

ஆனால் உலக நாயகன் இப்போது இவரை சுற்றலில் விட்டு வருகிறாராம். இப்படியே காத்திருந்தால் நம்ம பொழப்பே போய்விடும் என மகேஷ் நாராயணன் இப்போது இந்த படமே வேண்டாம் என்று குட்பை சொல்லிவிட்டாராம். அதைத்தொடர்ந்து மலையாளத்தில் மம்முட்டியை வைத்து ஒரு படத்தை இயக்கவும் அவர் தயாராகி இருக்கிறார். இந்த விஷயம் தான் இப்போது பரபரப்பை கிளப்பி இருக்கிறது.

Also read: பிரபாஸுக்கு இணையாக சம்பளம் வாங்கிய கமல்.. 20 நாட்களுக்கு மட்டும் வாரி வழங்கிய தயாரிப்பு நிறுவனம்

Trending News