பெரும்பாலும் தென்னிந்திய நடிகைகள் உடனே திருமணம் செய்து கொண்டால் தங்களது மார்க்கெட் இழந்து விடும் என்ற பயத்தில் திருமணத்தைத் தள்ளிப் போட்டு வருகிறார்கள். சில நடிகைகள் 35 வயதை கடந்தும் இன்னும் சிங்கிள் ஆகவே சுற்றி வருகிறார்கள்.
தமிழ், தெலுங்கு, மலையாளம் மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை திரிஷா. கடந்த 2018ல் விஜய் சேதுபதியுடன் திரிஷா நடித்த 96 படம் ரசிகர்களை பெருமளவு கவர்ந்தது. இந்நிலையில் த்ரிஷாவுக்கு தற்போது 38 வயது ஆகியும் தற்போது வரை திருமணம் செய்து கொள்ளாமல் சிங்கிளாக உள்ளார்.
திரிஷா தற்போது மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் படத்தில் குந்தி என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் மற்ற மொழிகளிலும் பல படங்களை கைவசம் வைத்துள்ளார். திரிஷா கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு மேலாக கதாநாயகியாக மட்டுமே நடித்து வருகிறார்.
திரிஷா ஏற்கனவே பல காதல் சர்ச்சையில் சிக்கியுள்ளார். கடந்த 2015ஆம் ஆண்டு திரிஷாவுக்கு சென்னையைச் சேர்ந்த தொழிலதிபரான வருண் மணியனுடன் நிச்சயதார்த்தம் ஆனது. ஆனால் ஒரு சில காரணங்களால் இந்த நிச்சயதார்த்தம் திருமணம் வரை போகவில்லை.
அதன் பிறகு திரிஷா, ராணா டகுபதி உடன் காதலில் விழுந்தார். ஆனால் பின்னர் இது சரியாக வராது என இருவரும் காதலை முறித்துக் கொண்டனர். தற்போது திரிஷாவிற்கு வயதாகிக் கொண்டே போவதால் அவரது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் திருமணம் செய்துகொள்ள வற்புறுத்துகிறார்கள்.
அதற்கு திரிஷா தற்போது நடித்துள்ள படங்கள் வெளியான பிறகும், ஒப்பந்தமாகி உள்ள படங்களில் நடித்த பின்பு திருமணம் செய்து கொள்கிறேன் என உறுதியளித்துள்ளாராம். இதனால் இன்னும் ஓரிரண்டு வருடத்திற்குள் திரிஷாவுக்கு திருமணம் நடைபெற வாய்ப்புள்ளது.