சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

மோகனின் கேரியரை காலி பண்ணிய பிரபல நடிகை.. காதலை மறுத்ததால் ஹீரோ இமேஜை உடைத்த பரிதாபம்

Actor Mohan: 80களில் முன்னணி நடிகராக வலம் வந்து ரஜினி, கமலுக்கு மிகப்பெரிய போட்டியாக வந்த நடிகர் தான் மைக் மோகன். இவர் ஹீரோவாக இருந்த காலத்தில் தமிழ் சினிமாவையே ஆட்டி படைத்தவர் இவர்தான் என்று சொல்லலாம். அதிலும் இவர் படங்கள் வெளி வருகிறது என்றால் மற்ற எந்த ஹீரோ படங்களையும் திரையரங்குகளில் ரிலீஸ் செய்ய மாட்டார்கள்.

ஏனென்றால் மோகன் படம் வந்தால் கண்டிப்பாக மற்ற படங்கள் அனைத்தும் ஓடாது, அந்த நிலைமையில் தான் அப்பொழுது இருந்தது. மேலும் இவர் நடித்த படங்கள் அனைத்துமே சூப்பர் ஹிட் படங்களாக வெற்றி பெற்று இவரை புகழின் உச்சத்திற்கு கொண்டு சென்றது. அத்துடன் இவர் நடித்த படங்கள் அனைத்துமே பட்டி தொட்டி எங்கும் பறந்தது.

Also read: ஊசி போட்டு உடல் எடையை ஏற்றிய மோகன் பட ஹீரோயின்.. மகனுக்காக எடுத்த விபரீத முடிவு

அப்பொழுது இருந்த இளசுகளின் கிரஸ் ஆகவும் அவர்களின் மனதில் இடம் பிடித்தார். அது மட்டும் இல்லாமல் இவர் ஹீரோவாக நடித்த காலத்தில் இவரை துரத்தி துரத்தி பிரபல நடிகை ஒருவர் இவரை காதலித்திருக்கிறார். அப்பொழுது இவருடைய காதலை மோகனுக்கு சொல்லி இருக்கிறார்.

ஆனால் மோகன் அப்பொழுது வளர்ந்து வந்த ஹீரோவாக இருந்ததால் அவருடைய முழு கவனமும் நடிப்பதில் மட்டுமே இருந்தது. அதனாலயே அந்த நடிகையின் காதலுக்கு மறுப்பு தெரிவித்து விட்டார். அதனால் இவருடைய சினிமா கேரியரை சாய்க்க வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு பல வேலைகளை அந்த நடிகை செய்து வந்தார்.

Also read: நான் ஹீரோ, விஜய்க்கு வில்லனா நடிக்க முடியாது.. இயக்குனரை விரட்டி மைக் மோகன் செய்த பெரும் தவறு

அப்பொழுது என்ன செய்தாலும் மோகனை அசைக்க முடியாததால் கடைசியில் அவருடைய இமேஜை டேமேஜ் செய்து விட்டார். அது எப்படி என்றால் மோகனுக்கு உயிர் கொல்லி நோய் இருக்கிறது என்று சினிமா முழுவதும் பரப்பி விட்டார். அதனாலயே இவருடைய இமேஜ் கொஞ்சம் கொஞ்சமா கீழே இறங்கி விட்டது.

அத்துடன் இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் இவரை படத்தில் மேற்கொண்டு நடிக்க வைக்க வேண்டாம் என்று குறைத்துக் கொண்டார்கள். இதனால் வெறுப்பான மோகன் கொஞ்சம் காலம் சினிமாவை விட்டு தலைமறைவாகி விட்டார். அத்துடன் அந்த நடிகை சொன்னது உண்மை என்று பலரும் அதை நம்பி மோகனை உதாசீனப்படுத்தி விட்டார்கள். பிறகு அந்த நடிகை இயக்குனர் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

Also read: அட மைக் மோகன் இவ்வளவு ரெக்கார்டு வச்சிருக்கிறாரா.? காலை முதல் இரவு வரை தவம் கிடக்கும் தயாரிப்பாளர்கள்

Trending News