வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

பத்து தல படத்திற்கு ரிலீஸ் தேதியை லாக் செய்த படக்குழு.. ஹாட்ரிக் வெற்றியை நோக்கி சிம்பு

சமீபகாலமாக சிம்பு நடிப்பில் வெளியான படங்கள் தொடர் தோல்வியை தழுவி வந்த நிலையில் கடந்த ஆண்டு வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான மாநாடு படம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது. அதுமட்டுமின்றி சிம்புவின் கேரியரில் அதிக வசூல் செய்த படம் என்ற பெயரை மாநாடு படம் பெற்றது.

இந்நிலையில் மாநாடு படத்திற்குப் பிறகு சிம்பு தொட்டதெல்லாம் தொடங்கும் என்பது போல அவருடைய நடிப்பில் அடுத்ததாக வெளியான வெந்து தணிந்தது காடு படமும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளியான இப்படம் வசூலை அள்ளித் தந்தது.

Also Read : பிரம்மாண்டமாக உருவாகும் சிம்புவின் 50வது படம்.. பிரபல இயக்குனர்களுடன் பேச்சு வார்த்தை

இதன் காரணமாக தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் படக்குழுவினருக்கு கார், பைக் என பரிசுகளை வழங்கினார். இப்போது சிம்பு ஹாட்ரிக் வெற்றி அடிக்க அடுத்ததாக உருவாகி இருக்கும் படம் பத்து தல. கன்னட மொழியில் சிவராஜ்குமார் நடிப்பில் வெளியான மஃப்டி படத்தின் ரீமேக் தான் பத்து தல.

இந்த படத்தில் சிம்புவுடன் இணைந்த நடிகர் கௌதம் கார்த்திக் நடித்துள்ளார். மேலும் 10 தல படத்தை கிருஷ்ணா இயக்கியிருக்கிறார். ஸ்டுடியோ கிரீன் சார்பாக ஞானவேல் ராஜா இப்படத்தை தயாரிக்க ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். இப்போது படத்தின் போஸ்டர் ரிலீஸ் தேதியுடன் வெளியாகி இணையத்தில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.

Also Read : சினிமாவில் திறமை 90% இருந்தாலும் அது ரொம்ப முக்கியம்.. தொடர் தோல்வியால் கதறும் சிம்பு பட நடிகை

அதாவது பத்து தல படம் அடுத்த ஆண்டு மார்ச் 30ஆம் தேதி வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. ஆகையால் மாநாடு, வெந்து தணிந்தது காடு படங்களை தொடர்ந்து பத்து தல படத்தின் வெற்றியும் உறுதி என சிம்பு ரசிகர்கள் ஆர்ப்பரிக்கின்றனர்.

pathu-thala

Also Read : சிம்புவை போல் விஷால் தேடும் ஆதரவு.. ரொம்பவும் ஊறிப்போன அரசியல் ஆசை

Trending News