வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

கமலஹாசனை 100 தடவை பார்க்கத் தூண்டிய படம்.. இந்த படத்தின் பிரதிபலிப்புதான் விருமாண்டி

உலகநாயகன் கமலஹாசன் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில் இறுதிகட்ட வேலைகள் நடந்து வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் விருமாண்டி படத்தில் ஜெயில் கேட்டை தள்ளிவிட்டு செல்லும் காட்சியை பற்றி கமலஹாசன் பேசியுள்ளார்.

கமலஹாசன் நடிப்பில் 2004 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் விருமாண்டி. இப்படத்தை கமலஹாசனை இயக்கி, தயாரித்து இருந்தார். விருமாண்டி படத்தில் அபிராமி, பசுபதி, நெப்போலியன் மற்றும் பலர் நடித்திருந்தனர். விருமாண்டி படத்திற்கு முதலில் சண்டியர் என பெயர் சூட்டப்பட்டது.

இதனால் பல எதிர்ப்புகள் மற்றும் சர்ச்சைகள் வர படத்தின் பெயரை விருமாண்டி என மாற்றப்பட்டது. இப்படத்தில் 26 பேரை படுகொலை செய்யப்பட்ட வழக்கில் விருமாண்டிக்கு தூக்கு தண்டனையும், கொத்தலர் தேவருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கபபடுகிறது.

சிறைக்கு ஆவணம் படம் எடுக்க வரும் ரோகிணி, குற்றவாளிகளின் பக்கத்திலிருந்து கதையை பார்க்கிறார். அதன்பின் இவர்களுக்கு மரண தண்டனை தேவை இல்லை என்பதை இப்படம் வலியுறுத்தியது. ஒரு தண்டனை வழங்கும்போது இரண்டு பக்கங்களையும் அலசி ஆராய வேண்டிய கட்டாயம் உண்டு என்பதை விருமாண்டி படம் காட்டி இருந்தது.

கமலஹாசன் பல புத்தகங்கள் மற்றும் ஆங்கில படங்கள் பார்ப்பதை வழக்கமாக வைத்திருப்பவர். இந்நிலையில் கமலஹாசன் விருமாண்டி படத்தில் அந்த ஜெயில் கேட்டை தள்ளிவிட்டு செல்லும் காட்சி எடுக்க உதாரணமாக இருந்தத படம் இசுடான்லி குப்ரிக்கு இன் ஸ்பார்ட்டகஸ் திரைப்படம் தானாம்.

இப்படம் அமெரிக்க வரலாற்றில் நாடகமாக 1960 இல் வெளியானது. இது ஹோவர்ட் ஃபாஸ்ட் எழுதிய ஸ்பார்ட்டகஸ் எனும் நாவலை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டது. கமலஹாசன் ஸ்பார்ட்டகஸ் படத்தை பல முறை விரும்பி பார்த்ததாகவும், நான் எடுக்கும் படங்களில் அதன் தாக்கம் இருக்கும் எனவும் கூறியிருந்தார்.

Trending News