திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

செப்டம்பர் 15ஐ குறிவைக்கும் மும்மூர்த்திகள்.. தலைவலியில் பந்தயத்துக்கு தயாராகும் சிம்பு

டாப் நடிகர்களின் படங்கள் ஒரே நாளில் வெளியானால் அவர்களது ரசிகர்கள் மத்தியில் கடுமையான போட்டி நிலவும். அதுமட்டுமல்லாமல் படத்தின் வசூலும் பெரிய அளவில் பாதிக்கும். ஆனால் செப்டம்பர் 15-ஆம் தேதி மூன்று இளம் நடிகர்களின் படங்கள் வெளியாகயுள்ளது. இந்தப் படங்களில் எந்த படம் அதிக வசூல் செய்யும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவி வருகிறது. சிம்புக்கு தலைவலி கொடுக்கும் விதமாக இரண்டு ஹீரோக்கள் தங்களது படங்களை வெளியிட உள்ளனர்.

வெந்து தணிந்தது காடு : மாநாடு என்ற மிகப்பெரிய வெற்றிப் படத்திற்குப் பிறகு சிம்புவின் நடிப்பில் வெந்து தணிந்தது காடு படம் வெளியாகயுள்ளது. கௌதம் வாசுதேவ் மேனன், சிம்பு கூட்டணியில் வெளியான படங்கள் எல்லாமே ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றது.

அந்த வகையில் வெந்து தணிந்தது காடு படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. இந்தப்படம் செப்டம்பர் 15 ஆம் தேதி ரிலீசுக்கு தயாராகயுள்ளது. மேலும் சிம்புக்கு தலைவலியாக மேலும் இரண்டு நடிகர்களின் படங்கள் இதே நாளில் வெளியாகயுள்ளது.

லத்தி : சமீபகாலமாக விஷாலின் நடிப்பில் வெளியாகும் படங்கள் பெரிய வரவேற்பு பெறவில்லை. இதனால் லத்தி படத்தின் மீது விஷால் முழு நம்பிக்கை வைத்துள்ளார். இப்படத்தை வினோத்குமார் இயக்க விஷாலின் நண்பர்கள் ரமணா மற்றும் நந்தா தயாரித்துள்ளனர். லத்தி படம் செப்டம்பர் 15 வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது.

அகிலன் : ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் மற்றும் அகிலன் படங்கள் செப்டம்பர் மாதம் வெளியாக உள்ளது. அதில் அகிலன் படத்தை பி ஜனநாதனின் உதவியாளர் கல்யாண் கிருஷ்ணன் இயக்கியிருந்தார். மேலும் இப்படம் ஒரு கேங்ஸ்டர் படமாக இருக்கும் என சொல்லப்படுகிறது. அகிலன் படம் லத்தி மற்றும் வெந்து தணிந்தது காடு படத்திற்கு போட்டியாக வெளியாகவுள்ளது.

இந்த மூன்று படங்களும் செப்டம்பர் 15ஆம் தேதி வெளியாகிறது என்பதால் எந்த படம் அதிக வசூல் வேட்டையாடும் என்ற எதிர்பார்ப்புக்கு மத்தியில் மணிரத்தினத்தின் பொன்னியின் செல்வன் படம் செப்டம்பர் 30ஆம் தேதி வெளியாகயுள்ளது. ஒரே மாதத்தில் பெரிய நடிகர்களின் படங்கள் தொடர்ந்து வெளியாகிறது என்பதால் செப்டம்பர் மாதம் திரையரங்குகளில் திருவிழாக்கள் போல் காட்சியளிக்க உள்ளது.

Trending News