வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

உருவ கேலிக்கு ஆளான முதல் நடிகர்.. உச்ச கட்ட அவமானத்தை சந்தித்த கமல் நண்பர்

Actor Nagesh: இளம் நடிகர்களுக்கு போட்டியாக அடுத்த கட்ட படங்களில் களமிறங்கியுள்ளார் கமலஹாசன். தமிழ் சினிமாவில் உருவ கேலிக்கு ஆளாகிய நடிகர்கள், நடிகைகள் ஏராளம். அவ்வாறு இருக்கையில் இவரின் நண்பருக்கும் இதுபோன்ற உச்சக்கட்ட அவமானம் ஏற்பட்டதன் சம்பவம் குறித்து சில தகவலை இங்கு காண்போம்.

அன்று முதல் இன்று வரை கமலுடன் கூட்டணியில் இணைந்து நடித்த நடிகர்களில் ஒருவர் தான் நகைச்சுவை நடிகரான நாகேஷ். இவர்கள் இருவரின் கூட்டணியில் வெளிவந்த படங்கள் அபூர்வ சகோதரர்கள், மைக்கேல் மதன காமராஜன், மகளிர் மட்டும், அவ்வை சண்முகி, பஞ்சதந்திரம்.

Also Read: ரஜினியின் டயலாக்கை அட்ட காப்பி அடித்த தளபதி.. மாணவர்களின் முன்னிலையில் உடைந்த சஸ்பென்ஸ்

சினிமா அல்லாது நிஜத்திலும் இருவருக்கிடையே நட்பு இருந்து வந்தது. இந்நிலையில் நாகேஷ் தன் ஆரம்ப காலத்தில் எதிர்கொண்ட அவமானங்கள் ஏராளம். அந்த காலகட்டத்தில் ஹீரோவிற்கு இருக்கக்கூடிய தன்மை என்னவென்றால் அழகான முகமும், சிகப்பான நிறமும், சுருள் சுருளான முடியையும் வைத்திருக்க வேண்டுமாம்.

அப்பொழுது தான் அவர்களுக்கு பட வாய்ப்பு கொடுப்பார்களாம். இந்த நிலையில் ஊரிலிருந்து சென்னைக்கு நடிக்க வந்து, வாய்ப்பு தேடி அலைந்த நாகேஷ் தன் கருமையான முகத்தோடு, முகத்தில் புள்ளி புள்ளியான தோற்றத்துடன் நடிக்க வந்தாராம். இத்தகைய தோற்றத்தால் இவரை உருவ கேலி செய்தும், அவமானமும் படுத்தினார்களாம்.

Also Read: காசு வாங்கிட்டு ஓட்டு போடாதீங்க.. அரசியல் விதையை சாமர்த்தியமாக போட்ட விஜய்

இதையும் எதிர்நீச்சல் கொண்டு தான், சினிமாவில் வாய்ப்பு பெற்று மூத்த நகைச்சுவை நடிகராக திகழ்ந்தாராம் நாகேஷ். இத்தகைய சம்பவத்தை கேட்கையில் இவரே இந்திய சினிமாவில் முதல் உருவ கேலிக்கு ஆளானார் என்பதை உறுதிப்படுத்துகிறது.

முகம் முழுக்க அம்மை போட்ட தோற்றத்திலும், புகையிலை போட்ட வாய் தோற்றத்திலும் இருந்த இவரை தொடர்ந்து ரிஜெக்ட் செய்தே வந்தார்களாம். இத்தகைய உச்சகட்ட அவமானத்தை எதிர்கொண்டு 1000 படங்களுக்கு மேல் நடித்த சாதனை பெற்ற நாயகனாய் வலம் வந்தவர் தான் நாகேஷ். தற்பொழுது இத்தகைய கலைஞனை தமிழ் சினிமா இழந்து நிற்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: 23 வருடங்கள் ஆகியும் விஜய் பக்கத்தில் நெருங்க முடியாமல் தவிக்கும் அஜித்.. கேரளாவின் வசூல் மன்னனாக வரும் தளபதி

Trending News