இப்போதெல்லாம் தமிழ் சினிமாவில் எடுக்கப்பட்டு வரும் படங்கள் பல கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டு வருகிறது. படம் பிரம்மாண்டமாக ரசிகர்களை கவர வேண்டும் என்பதற்காகவே இயக்குனர்கள் தற்போது அதிக பட்ஜெட் படங்களை இயக்க ஆரம்பித்து வருகின்றனர். அந்த வகையில் பொன்னியின் செல்வன், எந்திரன் போன்ற பல திரைப்படங்களை சொல்லலாம்.
ஆனால் அந்த காலகட்டத்திலேயே மிக அதிக பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட திரைப்படமும் இருக்கிறது. அதாவது புரட்சித்தலைவர் எம்ஜிஆர் நடிப்பில் 1973 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் தான் உலகம் சுற்றும் வாலிபன். எம்ஜிஆர் இயக்கி நடித்திருந்த இந்த திரைப்படத்தில் அவருடன் இணைந்து மஞ்சுளா, லதா ஆகியோர் நடித்திருந்தனர்.
Also read : கடைசி நேரத்தில் கழட்டிவிட்ட கமல் அண்ட் கோ.. கடும் கோபத்தில் ஆப்பு வைக்க ரெடியாகிய தயாரிப்பாளர்
மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்ற இந்த திரைப்படம் அந்தக் காலத்திலேயே 200 நாட்கள் வரை தியேட்டர்களில் ஓடி சாதனை படைத்தது. மேலும் இப்படம் 80 லட்சம் வரை செலவு செய்து எடுக்கப்பட்டிருந்தது. இவ்வளவு செலவில் அப்போதைய காலகட்டத்தில் எடுக்கப்பட்ட திரைப்படமும் இதுதான். ஆனால் இந்த திரைப்படத்தையே ஒரு திரைப்படம் ஓவர் டேக் செய்திருக்கிறது.
1986 ஆம் ஆண்டு கமல் நடிப்பில் வெளியாகி பலரையும் கவர்ந்த திரைப்படம் தான் விக்ரம். சத்யராஜ், அம்பிகா, ஜனகராஜ் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருக்கும் இந்த திரைப்படத்தில் கமல் பல புதுமையான விஷயங்களை நமக்கு காட்டி இருப்பார். அது மட்டுமல்லாமல் அதுவரை தமிழ் சினிமாவில் உபயோகிக்காத பல டெக்னாலஜிகளையும் அவர் அறிமுகப்படுத்தி இருப்பார்.
Also read : வாய்ப்புக்காக பொய் சொன்ன எம்ஜிஆர்.. சட்டையை பிடித்து சண்டை போட்ட இயக்குனர்
சயின்ஸ் டெக்னாலஜி சம்பந்தப்பட்ட அந்த திரைப்படம் தான் முதன்முதலாக ஒரு கோடி செலவில் எடுக்கப்பட்ட திரைப்படம் ஆகும். அந்த காலகட்டத்தில் ஒரு கோடி என்றால் இப்போது பல கோடிகளுக்கு சமம். அந்த அளவுக்கு அப்படம் பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டது. பலரையும் வியக்க வைத்த அந்த திரைப்படம் பல சாதனைகளை படைத்தது.
இப்போதும் கூட அந்த திரைப்படத்தை ரசிக்காத ரசிகர்களே இருக்க முடியாது. அந்த வகையில் கமல் எம்ஜிஆரை ஓரம் கட்டி பிரம்மாண்டமான ஒரு படத்தை தயாரித்து பலரையும் ஆச்சரியப்படுத்தினார். இப்படிப்பட்ட பெருமை கொண்ட இந்த படத்தின் தலைப்பிலேயே கமல் மீண்டும் நடித்து உலக அளவில் சாதனை பெற்றுவிட்டார்.
Also read : எம்ஜிஆரை கிண்டல் செய்யும் ஒரே நடிகர்.. கடைசி வரை தலைவலி கொடுத்த நலவிரும்பி