திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

Kamal: 25 கோடி லாபம் பார்த்த முதல் படம், முறியடிக்க முடியாத சாதனை.. கமலுக்கு கிடைத்த பொக்கிஷம்

Kamal: சினிமாவில் எத்தனையோ நடிகர்கள் கொடி கட்டி பறந்தாலும் கமலுக்கு என்று ஒரு தனித்துவம் இருக்கிறது. முக்கியமாக சினிமாவை பற்றி கரைத்துக் குடித்த என்சைக்ளோபீடியா என்று கூட சொல்லலாம். அந்த அளவிற்கு ஆதி முதல் அந்தம் வரை அனைத்து விஷயங்களையும் தெரிந்து வைத்திருக்கிறார்.

பொதுவாக இவர் நடிக்கக்கூடிய படங்கள் பார்ப்பதற்கு ஒரு சுவாரஸ்யமே இல்லாமல் தான் இருக்கும். ஆனால் அதில் இருக்க ஒரு மகத்துவம் வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாத சாதனை படமாக பெயர் வாங்கி விடும். அப்படி இவருடைய கேரியரில் ஏகப்பட்ட படங்கள் இருக்கிறது. இருந்தாலும் தமிழ் சினிமாவில் இப்பொழுது வரை முறியடிக்க முடியாத சாதனையாக வெற்றி பெற்றது இந்தியன் படம்.

கிட்டத்தட்ட வெளிவந்து 28 வருடங்கள் ஆகி இருக்கிறது. ஆனாலும் இப்படம் தமிழ் சினிமாவின் அனைத்து சாதனைகளையும் முறியடித்து இருக்கிறது என்றே சொல்லலாம். அதாவது 1996 ஆம் ஆண்டு 15 கோடி பட்ஜெட்டில் இயக்குனர் சங்கர் இப்படத்தை இயக்கி இருக்கிறார். இந்தியாவில் ஊழலுக்கு எதிராக ஒரு புரட்சி செய்யும் ஓய்வு பெற்ற சுதந்திர போராட்ட வீரரை சுற்றி இக்கதை நகரும்.

ஒரே படத்தில் சாதனை படைத்த கமல்

முக்கியமாக அந்த காலத்தில் பாதிக்கப்பட்ட பல பேரின் கண்ணீரைத் துடைக்கும் விதமாக இப்படம் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தி இருக்கிறது. அப்படிப்பட்ட இப்படம் தமிழ்நாடு மற்றும் மும்பையில் 175 நாட்களுக்கு மேல் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி இருக்கிறது. அதே மாதிரி ஆந்திரா, கேரளா, கர்நாடகா மாநிலங்களில் 100 நாட்களுக்கு மேல் ஓடி இருக்கிறது.

அத்துடன் பிராத்தனா டிரைவ் இன் தியேட்டரில் முதல் முறையாக 100 நாள் ஓடி சாதனை படைத்த திரைப்படம் இந்தியன் படம் தான். மேலும் மலேசியா மற்றும் கனடாவில் 50 நாட்களுக்கும் மேல் ஓடியிருக்கிறது. இப்படி இப்படம் அடைந்த சாதனைகளைப் பற்றி சொல்லிக் கொண்டே போகலாம். அந்த அளவிற்கு எக்கச்சக்கமான விஷயங்கள் இருக்கிறது.

அதுமட்டுமில்லாமல் தமிழ் சினிமாவில் 25 கோடிக்கு மேல் லாபத்தை பார்த்த முதல் படம் இந்தியன் படம் தான். அதனால் தான் இப்படம் ஆஸ்கர் விருதுக்கு அப்பொழுது பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறது. அதற்கு காரணம் பணத்தை வைத்து கப்பல் செய்து அலட்சியப்படுத்திய ஒரு விஷயத்திற்காக ஆஸ்கார் விருது கிடைக்காமல் போய்விட்டது.

கமலுக்கு மட்டுமே இப்படிப்பட்ட ஒரு பொக்கிஷம் கிடைத்திருக்கிறது. இவரை தவிர வேறு யாரு நடிச்சாலும் இந்த அளவிற்கு பெயர் வாங்கி இருக்காது. அதனால் தான் 28 வருடங்களுக்குப் பின் இதனுடைய தொடர்ச்சியாக இந்தியன் 2 மற்றும் 3 பார்ட்டில் நடிக்கும் வாய்ப்பு கமலுக்கு கிடைத்திருக்கிறது.

அதிலும் பிரம்மாண்டமாக இருக்க வேண்டும் என்று தற்போது 250 கோடி பட்ஜெட்டில் வீரசேகரன் சேனாதிபதி என்ற கேரக்டரில் மறுபடியும் கமல் களமிறங்கி இருக்கிறார். இப்படம் அடுத்த மாதம் திரையரங்குகளில் வெளியிட போவதாக பேச்சு வார்த்தைகள் அடிபட்டு வருகிறது. ஆனாலும் இன்னும் ஒரு சில வேலைகள் இருப்பதால் ரிலீஸ் தேதியில் மாற்றம் ஏற்படவும் வாய்ப்பு இருக்கிறது.

Trending News