வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

முதல புருஷன், இப்ப பொண்டாட்டியா.? டிஆர்பிக்காக விஜய் டிவி பிரபலங்களை கூண்டோடு தூக்கும் சன் டிவி

சன் டிவி தொடங்கி பல வருடங்கள் ஆகியும் மிகக் குறுகிய காலங்களில் வந்த விஜய் டிவி டிஆர்பியில் முதலிடத்தை பெற்று வருகிறது. அதிலும் குறிப்பாக பாண்டியன் ஸ்டோர்ஸ், பாக்கியலட்சுமி தொடர்கள் ஒவ்வொரு வாரமும் முதல் இரண்டு இடங்களை பிடித்து வருகிறது.

ஏனென்றால் விஜய் டிவி பிரபலங்கள் மக்கள் மத்தியில் நன்கு பரீட்சியமானவர்களாக உள்ளனர். அதாவது விஜய் டிவியில் சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் ரியாலிட்டி ஷோவில் இந்த நட்சத்திரங்கள் பங்கு பெறுகிறார்கள். அதுமட்டுமின்றி இவர்கள் தனியாகவே யூடியூப் சேனல் தொடங்கி அதிலும் சம்பாதித்து வருகிறார்கள்.

Also Read : உருட்டுறதுக்கு கதை இல்லாமல் முட்டாளாக்கும் பாரதி கண்ணம்மா.. இதுக்கு மேல கேவலமா ஒரு சீரியல் எடுக்க முடியாது

இந்நிலையில் தற்போது சன் டிவி விஜய் டிவியின் டிஆர்பியை குறைப்பதற்காக அந்த தொலைக்காட்சியில் உள்ள பிரபலங்களை கூண்டோடு தூக்கி உள்ளது. அதாவது விஜய் டிவியில் ராஜா ராணி தொடர் முலம் மக்கள் மத்தியில் மிகவும் பரிச்சயமானவர் சஞ்சீவ்.

இத்தொடரில் தனக்கு ஜோடியாக நடித்த ஆலியா மானசாவை காதலித்து சஞ்சீவ் திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் கயல் தொடரில் சஞ்சீவ் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இதனால் சன் டிவி டிஆர்பி எகிற தொடங்கியது. இப்போது சஞ்சீவின் பொண்டாட்டியையும் ஸ்கெட்ச் போட்டு தூக்கி உள்ளனர் சன் டிவி.

Also Read : மிச்சர் மட்டும் சாப்பிட்டதற்கு இவ்வளவு சம்பளமா?. 42 நாட்களில் நிவாவுக்கு வாரி வழங்கிய பிக் பாஸ்

அதாவது ராஜா ராணி 2 தொடரில் கதாநாயகியாக நடித்து வந்த ஆலியா மானசா 2வது முறையாக கருவுற்றதால் இத்தொடரில் இருந்து விலகி விட்டார். இப்போது ஒர்க் அவுட் மூலம் உடல் எடையை குறைத்து மீண்டும் ஸ்லிம்மாகி சீரியலில் நடக்க தொடங்கியுள்ளார்.

ஆரம்பத்திலிருந்து விஜய் டிவியில் நடித்து வந்த ஆல்யா முதல்முறையாக தற்போது சன் டிவி தொடரில் நடிக்க உள்ளார். இவருக்கு ஜோடியாக சன் டிவியில் டீலா நோ டீலா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய ரிஷி நடிக்க உள்ளார். விரைவில் இத்தொடர்க்கான ப்ரோமோ வெளியாக உள்ளது.

Also Read : முதல் முறையாக சன் டிவி டிஆர்பி-யை அடித்து நொறுக்கி விஜய் டிவி.. அனல் பறக்கும் டாப் 10 சீரியல்கள்

Trending News