புதன்கிழமை, ஜனவரி 15, 2025

சிவகார்த்திகேயனுக்காக உதயநிதி போட்ட ட்வீட்.. மாவீரனுக்கு வந்த முதல் விமர்சனம்

Udhayanidhi- Sivakarthikeyan: மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி இருக்கும் மாவீரன் படம் மிகப்பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நாளை வெளியாக இருக்கிறது. அதிதி ஷங்கர், சரிதா, மிஸ்கின் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இப்படத்திற்கான பிரமோஷன் வேலைகள் இப்போது தடபுடலாக நடைபெற்று வருகிறது.

கடைசியாக சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த பிரின்ஸ் மிகப்பெரும் சறுக்களை சந்தித்தது. அதை அடுத்து மாவீரன் படத்தின் மூலம் தனக்கான வெற்றியை பதிவு செய்ய வேண்டிய கட்டாயத்தில் அவர் இருக்கிறார். அதனாலேயே சிவகார்த்திகேயன் இப்போது ஓடி ஓடி படத்தை பிரமோஷன் செய்து வருகிறார்.

Also read: சின்ன வயசுலயே மாமா பொண்ணுக்கு ரூட் விட்ட சிவகார்த்திகேயன்.. ஆர்த்தியுடன் எடுத்துக்கொண்ட வைரல் போட்டோ

இந்நிலையில் மாவீரன் படத்தை பார்த்துவிட்டு உதயநிதி தன்னுடைய முதல் விமர்சனத்தை ட்விட்டர் தளத்தில் ஒரு பதிவு மூலம் வெளியிட்டுள்ளார். அதில் படத்தை பாராட்டியோ சிவகார்த்திகேயனின் நடிப்பை புகழ்ந்தோ அவர் எந்த வார்த்தையையும் கூறவில்லை. அதற்கு மாறாக மாவீரன் சூப்பர் என்ற ஒரு எமோஜியை மட்டும் போட்டு தன் விமர்சனத்தை தெரிவித்துள்ளார்.

இந்த ஒரு விஷயமே படம் வேற லெவலில் உள்ளது என்பதை காட்டுகிறது. இதுதான் இப்போது சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகி வருகிறது. இதற்கு சிவகார்த்திகேயனின் ரசிகர்கள் தங்கள் நன்றியையும் தெரிவித்து வருகின்றனர். மேலும் மாவீரன் படத்தின் விநியோக உரிமையை உதயநிதியின் ரெட் ஜெயன்ட் நிறுவனம் தான் பெற்றுள்ளது.

Also read: சிவகார்த்திகேயனோட ஜோடி போட அதிதி சங்கருக்கு இப்படி தான் வாய்ப்பு கிடைத்தது.. சீக்ரெட்டை போட்டுடைத்த பயில்வான்

அதன் காரணமாகவே அவர் சிவகார்த்திகேயனுக்கு சப்போர்ட் செய்து இப்படி ஒரு ட்வீட் போட்டு இருக்கிறார். அது மட்டும் இன்றி சிவகார்த்திகேயனும் மாமன்னன் பட இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு தன் அன்பை வெளிப்படுத்தினார். இப்படி இவர்கள் இருவரும் மாறி மாறி சப்போர்ட் செய்து கொள்கின்றனர்.

udhayanidhi-tweet
udhayanidhi-tweet

அந்த வகையில் உதயநிதி கூறிய முதல் விமர்சனம் படத்திற்கான பிரமோஷனாக மாறி இருக்கிறது. அது மட்டும் இன்றி ரிலீஸ் நேரத்தில் மாவீரன் சில பிரச்சனைகளை சந்தித்தது. அது அனைத்தும் தற்போது தீர்ந்திருக்கும் நிலையில் படத்தை வேற லெவலில் கொண்டாடுவதற்கும் சிவகார்த்திகேயனின் ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

Also read: உயரப் பறந்தாலும் ஊர் குருவி பருந்தாகாது.. விஜய்யை பார்த்து சிவகார்த்திகேயன் போட்ட பிளான்

Trending News