வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

வந்தியதேவனை வைத்து வளர்ந்த 5 இயக்குனர்கள்.. கார்த்திக்கு பிறகு தளபதி வாய்ப்பை பெற்ற 2 டைரக்டர்கள்

Actor Karthi: பொன்னியின் செல்வன் படத்தில் வந்திய தேவனாக நடித்து ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களையும் கவர்ந்திருந்தார் கார்த்தி. ஆரம்பத்தில் உதவி இயக்குனராக சினிமாவில் நுழைந்தாலும் இவரை நடிகராக்கி அழகு பார்த்தது தமிழ் சினிமா. ஆனால் கார்த்தியின் படத்தை இயக்கிய பிறகு ஐந்து இயக்குனர்களுக்கு பெரிய நடிகர்களின் பட வாய்ப்பு கிடைத்துள்ளது.

பா ரஞ்சித் : கார்த்தியை வைத்து இவர் இயக்கிய படம் தான் மெட்ராஸ். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அடுத்ததாக சூப்பர் ஸ்டார் ரஜினியின் கபாலி படத்தை பா ரஞ்சித் இயக்கியிருந்தார். இப்போது விக்ரமின் தங்கலான் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்திற்காக ரசிகர்கள் பெரிதும் காத்து கொண்டிருக்கிறார்கள்.

Also Read : ஆழ்மனதில் வேரூன்றிய ஜாதி, அடிச்சா திருப்பி அடிக்க மாட்டாங்க.. பா ரஞ்சித்தை போல மாறி வரும் இயக்குனர்

லோகேஷ் கனகராஜ் : கார்த்தியை வைத்து கைதி என்ற தனது இரண்டாவது படத்தை இயக்கினார் லோகேஷ். இப்படத்திற்கு கிடைத்த வரவேற்பின் காரணமாக விஜய்யின் மாஸ்டர் படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதைத்தொடர்ந்து விக்ரம் என்ற இன்டஸ்ட்ரியல் ஹிட் படத்தை கொடுத்திருந்தார். இப்போது மீண்டும் விஜயுடன் இணைந்து லியோ படத்தை எடுத்து வருகிறார்.

எச் வினோத் : சதுரங்க வேட்டை படத்தின் மூலம் அறிமுகமான எச் வினோத் அடுத்ததாக கார்த்தியின் தீரன் அதிகாரம் ஒன்று படத்தை இயக்கி இருந்தார். இந்த படத்தை பார்த்து ஷாலினி வியந்துள்ளார். அதன் பிறகு தான் அஜித்திடம் வினோத் செல்ல நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு என அடுத்தடுத்த மூன்று படங்கள் கிடைத்தது.

Also Read : வாய்ப்பும், வெற்றியும் எளிதாய் கிடைத்ததால் வரும் கர்வம்.. லோகேஷ், எச். வினோத் அடாவடி பேச்சு

சிறுத்தை சிவா : கார்த்தியின் நடிப்பில் வெளியான சிறுத்தை படத்தை இயக்கியிருந்தார் சிவா. இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு அவருக்கு சிறுத்தை சிவா என்றே அடையாளமாக மாறியது. அதன் பிறகு வீரம், வேதாளம், விவேகம் மற்றும் விஸ்வாசம் என தொடர்ந்து நான்கு படங்களை அஜித்துக்கு சிறுத்தை சிவா கொடுத்திருந்தார்.

வம்சி : தெலுங்கு இயக்குனரான வம்சி கார்த்தி, தமன்னா, நாகர்ஜூன் ஆகியோரை வைத்து தோழா படத்தை இயக்கியிருந்தார். இந்த படத்திற்கு பிறகு தமிழில் விஜய்யின் வாரிசு படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் இந்த படத்தை முழுக்க முழுக்க தெலுங்கு சாயலில் வம்சி எடுத்திருந்தார்.

Also Read : இவங்கலாம் இயக்குனர்களா என ஆச்சரியமூட்டும் 5 நடிகர்கள்.. விஜய் படத்தை இயக்கிய கருங்காலி

Trending News