செவ்வாய்க்கிழமை, ஜனவரி 21, 2025

கிறுக்கன் என ஓரம் கட்டப்படும் ஹீரோ.. மொத்தமாக மாறும் ஆட்டம், எதிர்பாராததை எதிர்பார்க்க வைத்த பிக்பாஸ்

Biggboss 7: முதல் வாரத்திலேயே ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்த பிக்பாஸ் வீடு அடுத்தடுத்த வாரங்களில் சபாஷ் சரியான போட்டி என கலகலக்க வைத்துள்ளது. சில இடங்களில் சுவாரஸ்யம் குறைவாக இருந்தாலும் முந்தைய சீசன்களை காட்டிலும் இந்த சீசன் தாறுமாறாகவே சென்று கொண்டிருக்கிறது.

அதிலும் யாருக்கும் யாரும் சளைத்தவர்கள் இல்லை என்ற ரேஞ்சில் போட்டியாளர்கள் அடுத்தடுத்து கன்டென்ட் கொடுத்து வருவது பிக்பாஸையும் குதூகலப்படுத்தி இருக்கிறது. அந்த வகையில் மாயா, பூர்ணிமா உள்ளிட்ட சிலர் ஒட்டுமொத்த வெறுப்பையும் சம்பாதித்து விஷ பாட்டில்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.

இவர்கள் இருவரும் சேர்ந்து கொண்டு கிழவிகள் போல் புறணி பேசும் கதை தான் சோசியல் மீடியாவில் கலாய்க்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் மாயா, பிரதீப் மேல் இருக்கும் வன்மத்தை ஒவ்வொரு முறையும் காட்டி வந்தார். அவருக்கு நோஸ்கட் கொடுக்கும் வகையில் இந்த வாரம் அவர் காப்பாற்றப்பட்ட போது பார்வையாளர்கள் கொடுத்த கரகோஷங்கள் அசத்தலாக இருந்தது.

இதிலிருந்தே பிரதீப்புக்கு ஆதரவு பெருகி வருவது கண்கூடாக தெரிகிறது. ஆரம்பத்தில் இவருக்கு நெகட்டிவ் விமர்சனங்கள் வந்தாலும் தற்போது அவருடைய நடவடிக்கை நன்மதிப்பை பெற்று வருகிறது. ஆனாலும் இவர் வீட்டில் இருக்கும் போட்டியாளர்களால் ஒரு ஜோக்கர் போல் தான் பார்க்கப்பட்டு வருகிறார்.

இதை விசித்ராவே ஒருமுறை கிறுக்குத்தனமா பண்றான் என விளையாட்டாக கூறியிருந்தார். மேலும் இவரை பிடிக்காத விஷ்ணு உள்ளிட்ட பலர் இவரை டம்மி லிஸ்ட்டில் தான் வைத்து வருகின்றனர். ஆனால் அவர்களுக்கு தெரியவில்லை ஜோக்கர் கதையில் ஹீரோவே அந்த ஜோக்கர் தான் என்று.

இப்படி இவருக்கு கொஞ்சம் கொஞ்சமாக பெருகும் ஆதரவு விஸ்வரூபமாக வளர்ந்து கொண்டும் இருக்கிறது. அந்த வகையில் இனி வரும் வாரங்களில் போட்டியாளர்கள் இவரை டார்கெட் செய்யவும் வாய்ப்பு இருக்கிறது. இருப்பினும் இந்த ஹீரோ இப்போது மொத்த ஆட்டத்தையும் மாற்றிவிட்டார் என்பது அவர்களுக்கு தெரிய வாய்ப்பில்லை. அந்த வகையில் எதிர்பாராததை எதிர்பார்க்க வைத்த பிக்பாஸ் இன்னும் பல திருப்பங்களை கொடுக்க காத்திருக்கிறது.

Trending News