ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

ரெட் கார்டை யாரும் மதிக்காமல் செய்த ஹீரோ.. தனுஷ் அதர்வாவெல்லாம் தெனாவட்டாய் போடும் பேயாட்டம்

ரெட் கார்டு இது தனியாக எந்த ஒரு எழுத்துப்பூர்வமாக இல்லாமல் வெறுமென வாய் வார்த்தைகளால் சொல்லப்படும் ஒரு சாதாரண வார்த்தையாக தான் இப்பொழுது பார்க்கப்படுகிறது. ஆரம்பத்தில் இது எழுத்துப்பூர்வமாக ஒரு கம்ப்ளைன்ட் மாதிரி போடப்பட்டது. ஆனால் அதற்கு ஆப்பு வைத்துள்ளார் ஒரு ஹீரோ.

முதன்முதலாக அந்த ஹீரோவிற்கு தான் ரெட் கார்டு போடப்பட்டது.எனக்கா ரெட் கார்டு போடுறீங்க என்று போட்டவர்களுக்கு, தகுந்த பதிலடி கொடுத்து தன்னிடம் வந்து கெஞ்சுமாறு செய்து விட்டார் அந்த ஹீரோ. அந்த உச்சநடிகர் என்ன செய்தார், எல்லோரையும் எப்படி பழி வாங்கினார் என்பதை இதில் பார்ப்போம்.

Also read: ஜவான் படத்தின் வெற்றியால் ஓவர் மிதப்பில் சுற்றி திரியும் அட்லீ.. அது சரி ஆசைப்படுவதெல்லாம் தப்பில்லையே?

விஸ்வரூபம் படத்தை கமல் டிடிஎச்சில் ரிலீஸ் செய்கிறேன் என்று வாக்குவாதம் செய்து கொண்டிருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தியேட்டர் மற்றும் விநியோகஸ்தர்கள் சங்கம் கமலுக்கு ரெட் கார்டு போட்டது. கோபமடைந்த கமலஹாசனின் அண்ணன் டெல்லி சென்று காம்பெட்டிவ் கமிஷனிடம் கம்ப்ளைன்ட் செய்துள்ளார். ஜனநாயக நாட்டில் ,சுய உரிமை இல்லை எங்களை இப்படி மிரட்டுகிறார்கள் என்று புகார் அளித்துள்ளார்.

உடனே அந்த கமிஷன், தியேட்டர் ஓனர்களையும். விநியோகஸ்தர்களையும் எச்சரிக்கை செய்து ஒரு பெருந்தொகையை அதாவது கோடி கணக்கில் கமலுக்கு நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும் என்று உத்தரவு போட்டுள்ளது. இதனை சற்றும் எதிர்பாராத தியேட்டர் உரிமையாளர்கள் பயந்து போய் கமல் இடம் ஓடி வந்தனர்..இப்படி ஒரு கமிஷன் இருப்பதே அவர்களுக்கு அப்பொழுது தான் தெரியும்.

Also read: எங்க அண்ணன ஏன் ஜவான்ல யூஸ் பண்ணல தெரியுமா.? பெரிய பிளானை தீட்டி வைத்திருக்கும் அட்லி

தயவுசெய்து கம்பளைண்டை வாபஸ் பெறுங்கள் என்று கமலிடம் மன்றாடினது. கமலுக்கு அப்பொழுது தான் தெரியும் ஒரு முறை புகார் கொடுத்தால் அதை திரும்ப பெற முடியாது என்று. இப்பொழுது வரை அந்த கேஸ் ஓடிக் கொண்டுதான் இருக்கிறது, கமலுக்கு அவர்கள் நஷ்ட ஈடு கொடுத்தே ஆக வேண்டும்.

இதனை வைத்து தான் இப்பொழுது உள்ள இளம் ஹீரோக்கள் ஆடிக் கொண்டிருக்கின்றனர். வெறும் வாய் வார்த்தைகளால் தான் இந்த மாதிரி ரெட் கார்டு என்று சொல்லுவார்கள்,இதை வைத்து எந்த ஒரு எக்ஸ்ட்ரீமான வேலைகளையும் செய்ய முடியாது. அதனால் இப்பொழுது ரெட் கார்டு போடப்பட்ட தனுஷ், அதர்வா, எஸ் ஜே சூர்யா, விஷால் போன்றவர்கள் தலைகீழாய் ஆடிக் கொண்டிருக்கிறார்கள்

Also Read:சஞ்சய் தத் கழுத்தை ஆக்ரோஷமாக பிடித்த விஜய்.. டெவிலை சந்தித்த லியோ போஸ்டர்

Trending News