வெற்றிமாறனால் ஹீரோவை மாற்றிய அமரன் பட இயக்குனர்.. சிம்பு இடத்தைப் பிடித்த நடிகர்

Simbu : லிட்டில் ஸ்டார் என அழைக்கப்பட்டதிலிருந்து தற்போது வரையிலும் சினிமாவில் தனக்கென்று பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருக்கும் நடிகர் சிம்பு.

சிம்பு தக் லைப் திரைப்படத்தில் நடிக்க போகிறார் என்று கேள்விப்பட்டதுமே ரசிகர்கள் ஆனந்த வெள்ளத்தில் ஆடினர். ஆனால் திரைப்படம் ரிலீஸான பிறகு அந்த கொண்டாட்டம் எல்லாம் மண்ணோடு மண்ணாய் போனது.

தாங்க முடியாத விமர்சனம்:

தக் லைப் திரைப்படம் ஜூன் 5-ஆம் தேதி வெளியானதில் இருந்து இப்போது வரையிலும் ரசிகர்கள் மீம்ஸ், ட்ரோல் என வலைத்தளத்தில் பறக்க விட்டு வருகின்றன. திரிஷா மற்றும் சிம்புவின் கதாபாத்திரம் மீம்ஸ் மூலம் கேலிக்கு உள்ளாக்கப்பட்டது.

ஆனால் இதை எதையும் பொருட்படுத்தாத சிம்பு, தற்போது தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் STR50 திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். ஆனால் இதில் ஒரு ட்விஸ்ட் இருக்கிறது.

சிம்பு இடத்தை பிடித்த நடிகர்

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது அடுத்த படத்தை நடிகர் மணிகண்டனை வைத்து இயக்கத் திட்டமிட்டுள்ளார். இது சிறிய பட்ஜெட் படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மணிகண்டனின் படத்தை முடித்த பிறகு சிம்புவின் STR50 திரைப்படத்தை இயக்கத் திட்டமிட்டுள்ளார் தேசிங் பெரியசாமி.

இதற்கிடையில் சிம்பு ஏற்கனவே உறுதி கொடுத்த, வெற்றிமாறனின் திரைப்படத்தை முடித்துக் கொடுக்க இருக்கிறார். இந்த செய்தி சினிமா வட்டாரத்தில் சிம்புவுக்கு எவ்வளவு மவுஸ் என்று சிந்திக்க வைத்துள்ளது.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →