வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

உதயநிதிக்கு ஜோடியாக நடித்த பின் காணாமல் போன ஹீரோயின்.. தமிழ் சினிமாவை விட்டு ஓடியதன் ரகசியம்

Udhayanidhi Heroine: ஆரம்பத்தில் உதயநிதி ஹீரோவாக நடித்த படங்களில் இவருக்கு இணையாக சந்தானத்தின் காமெடி ட்ராக்கும் கைகொடுத்து தூக்கி விட்டிருக்கிறது. அதன்பின் ஒரு ஹீரோ ரேஞ்சுக்கு மாறிய உதயநிதி கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து நடிக்க ஆரம்பித்தார். அந்த வகையில் சைக்கோ, நெஞ்சுக்கு நீதி, கலகத் தலைவன், கண்ணை நம்பாதே,மாமன்னன் போன்ற படங்களில் நடித்தார்.

அப்படி இவர் நடித்த படங்களில் இவருக்கு ஜோடியாக நடித்த ஒரு ஹீரோயின் இவருடன் கடைசியாக நடித்ததற்கு பிறகு ஆள் அட்ரஸ் இல்லாமல் போய்விட்டார். அந்த வகையில் தமிழ் சினிமாவிற்கு பெரிய கூடு கும்பிடு போட்டு ஓடிவிட்டார். அவர் வேறு யாருமில்லை உதயநிதிக்கு ஜோடியாக கலகத் தலைவன் படத்தில் நடித்த நிதி அகர்வால்.

இவர் இதுக்கு முன்னதாக சிம்புக்கு ஜோடியாக ஈஸ்வரன் படத்திலும், ஜெயம் ரவிக்கு ஜோடியாக பூமி படத்திலும் நடித்திருக்கிறார். ஆக மொத்தத்தில் தமிழில் மூன்று படங்களில் மட்டுமே நடித்த பிறகு தமிழ் சினிமாவை வேண்டாம் என்று நினைத்து தற்போது தெலுங்கு பக்கம் போயிட்டார்.

Also read: அடிமேல் அடிவாங்கும் சந்தானம்.. கமுக்கமாக நண்பனுக்கு டிமிக்கி கொடுத்த உதயநிதி

ஆனால் இந்த நடிகையை பார்ப்பதற்கு ரொம்பவே அழகாகவும், நடிக்கும் திறமையும் டான்ஸும் எல்லாமே இருக்கும். ஆனாலும் இவர் கதாபாத்திரங்கள் பெருசாக மக்களிடம் எடுபடாமல் போய்விட்டது. அத்துடன் இவர் நடித்த படங்கள் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. அதனால் இந்த நடிகைக்கு ஒரு ஃபெயிலியர் ஹீரோயின் என்ற முத்திரையை குத்தி விட்டார்கள்.

இதற்குப் பிறகும் தமிழ் சினிமாவில் நடித்தால் பிரயோஜனம் இல்லை என்று போய்விட்டார். இதற்கிடையில் கவர்ச்சியான போட்டோ சூட் வைத்து அந்த புகைப்படங்கள் அனைத்தையும் இணையத்தில் வெளியிட்டு மார்க்கெட்டை எகிற வைப்பதற்கு பல வழிகளில் முயற்சி செய்தார். ஆனாலும் அது எதுவும் இவருக்கு கை கொடுக்கவில்லை.

Also read: தனுஷ், சிவகார்த்திகேயனுக்கு ஏற்பட்ட சிக்கல்.. செக் வைத்த உதயநிதி

Trending News