திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

விஜய்க்காக இறங்கி வந்த பவானி.. ஷாக் மேல் ஷாக் கொடுத்து லோகேஷ் செய்யும் சம்பவம்

முதல் படத்திலேயே அனைவராலும் கவனிக்கப்பட்ட லோகேஷ் இப்போது ஓவர் நைட்டில் ட்ரெண்ட்டாகி இருக்கிறார். இதற்கு முக்கிய காரணம் உலக நாயகனுடன் அவர் கைகோர்த்த விக்ரம் படம் தான். சர்வதேச அளவில் பட்டையை கிளப்பிய அப்படத்தை தொடர்ந்து இப்போது லோகேஷ் லியோ படத்தில் பிஸியாகி இருக்கிறார்.

விஜய், திரிஷா, அர்ஜுன், சஞ்சய் தத் என ஏராளமான நட்சத்திரங்கள் நடித்து வரும் இப்படம் மிகப்பெரும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. நாளுக்கு நாள் இப்படத்திலிருந்து வெளிவரும் அப்டேட்டுகள் தான் சோசியல் மீடியாவை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறது.

Also read: 100 கோடி சம்பளம் வாங்கி சங்கத்தையே துருப்பிடிக்க வச்சிட்டீங்க.. ஆவேசத்தில் கத்திய லியோ வில்லன்

அதில் பட குழு அதிகாரப்பூர்வமாக சில அப்டேட்டுகளை அடுத்தடுத்து கொடுத்து வருகிறது. அதை தொடர்ந்து படம் தொடர்பான பல முக்கிய செய்திகளும் அரசல் புரசலாக வெளிவந்து கொண்டிருக்கிறது. அந்த வகையில் தற்போது வெளிவந்துள்ள ஒரு செய்தி பலருக்கும் ஷாக் கொடுக்கும் விதமாக இருக்கிறது.

அதாவது லோகேஷின் ஆஸ்தான நடிகராக இருப்பவர் தான் விஜய் சேதுபதி. மாஸ்டர் படத்தில் பவானியாக மிரட்டிய அவர் விக்ரம் திரைப்படத்திலும் கமலுக்கு ஈடு கொடுத்து கலக்கியிருந்தார். அதனாலேயே லியோ படத்தில் அவர் கட்டாயம் இடம் பெறுவார் என்று கூறப்பட்டது. ஆனால் அது குறித்த எந்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பும் இதுவரை வெளிவரவில்லை.

Also read: ஜெயிலர், லியோ கொடுத்த தைரியம்.. சரசரவென தீபாவளிக்கு வரிசை கட்டும் 4 படங்கள்

இந்நிலையில் விஜய் சேதுபதி லியோ திரைப்படத்தின் ஒரு பாகமாக இணைந்துள்ளார் என்ற தகவல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் இந்த முறை அவர் படத்தில் நடிக்கவில்லை. அதற்கு மாறாக லியோவான விஜய் இடம்பெறும் காட்சிகளில் பின்னணி குரல் கொடுக்க இருக்கிறாராம். இது லோகேஷுக்காக மட்டுமல்லாமல் விஜய்க்காகவும் அவர் செய்யும் விஷயமாகும்.

எப்படி என்றால் பொன்னியின் செல்வன் படம் ஆரம்பிக்கும் போது கமலின் குரல் நம்மை கதைக்குள் இழுத்துச் செல்வது போன்று அமைக்கப்பட்டிருந்தது. அதேபோன்றுதான் லியோ படத்தில் விஜய் சேதுபதியின் குரலும் இடம்பெறும் என்று திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அந்த வகையில் லோகேஷ் இன்னும் நாம் எதிர்பாராத பல ஷாக்கை கொடுத்து தரமான சம்பவத்தை நிகழ்த்த இருப்பது மட்டும் உறுதியாக தெரிகிறது.

Also read: அதிக வியூசை பெற்று முதல் 5 இடத்தை பிடித்த பாடல்கள்.. அரபிக் குத்தை மிஞ்சிய ரவுடி பேபி

Trending News