Ethirneechal Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் சீரியலில், ஜனனியின் அப்பா நாச்சியப்பன் குடும்பத்தை காட்டும் விதமாக புது கேரக்டர்களை கொண்டு வந்திருக்கிறார்கள். இவர்களை பார்த்த சந்தோஷத்தில் நாச்சியப்பன் ஒட்டுமொத்தமாக அவர்கள் பக்கம் போய்விட்டார். இதை கொஞ்சம் கூட எதிர்பார்க்காத ஜனனியின் அம்மா தன்னுடைய புருஷன் காலில் விழுந்து கெஞ்சி கூத்தாடி அவரை கூப்பிடுகிறார்.
ஆனால் நாச்சியப்பன் எதையுமே காதில் வாங்கிக் கொள்ளாமல் அவர்கள் குடும்பத்துடன் போய் விடுகிறார். அடுத்து ஒட்டுமொத்த குடும்பமும் ஜனனி மற்றும் அவருடைய அம்மாவை வெளியே அனுப்பி விடுகிறார்கள். இதனால் 30 வருஷ வாழ்க்கையை ஒரேடியாக முடிந்து விட்டதே என்று நிலை குலைந்து போய் தவித்து வருகிறார் ஜனனியின் அம்மா.
இவருக்கு ஆறுதலாக ஜனனி மற்றும் சக்தி நிற்கிறார்கள். அத்துடன் நாச்சியப்பன் குடும்பத்துடன் சேர்ந்து விட்டார். இவர்கள் அனைவரும் சேர்ந்து ஜனனி வாங்கிய கம்பெனிக்கு பூஜை போட ஆரம்பித்து விட்டார்கள். இதனை பார்த்து ஜனனியும் ஒன்று பேச முடியாமல் அம்மாவை கூட்டிட்டு வெளியே வந்து விடுகிறார்.
Also read: இருக்க டிஆர்பி-யவே காப்பாத்த முடியல, இதுல இன்னொரு சீரியலா.? விஜய் டிவியின் பரிதாபங்கள்
வரும் வழியில் அம்மாவுக்கு ஆறுதலாக பேசி நான் இருக்கேன் நீ எங்க கூட வா என்று கூப்பிடுகிறார். அதற்கு நான் வேற வந்து உனக்கு பாரமாக இருக்க விரும்பவில்லை என்று சொல்கிறார். இந்த சமயத்தில் நாச்சியப்பன் யாருக்கும் தெரியாமல் இவர்களை பார்க்க ஓடோடி வருகிறார். அப்படி நாச்சியப்பன் தன்னுடைய மனைவி பார்வதி என்று கூப்பிட்டு பேச வருகிறார்.
ஆனால் நாச்சியப்பன் பண்ணின விஷயத்துக்கு மொத்தமாக கொந்தளித்து தன் கணவரை கண்ணா பின்னா என்று திட்டி விடுகிறார் ஜனனியின் அம்மா. அதே மாதிரி ஜனனியும் அப்பா என்று மரியாதை கொடுக்காமல் யாரோ மாதிரி பேசி விட்டார். இந்நிலையில் நாச்சியப்பன் ஏதோ ஒரு விஷயத்தை சொல்ல வருகிறார். ஆனால் அதை யாரும் காது கொடுத்து கேட்பதாக தெரியவில்லை.
இத்தனை வருடமாக சொத்து அந்தஸ்த்து வேண்டாம் என்று இருந்தவர் தற்போது மட்டும் பணத்துக்கு ஆசைப்பட்டு கண்டிப்பாக குடும்பத்துடன் போயிருக்க மாட்டார். இவர் போனதற்கு பின்னால் கண்டிப்பாக ஒரு பிளான் இருக்கும். அதுவும் ஜனனியின் நல்லதுக்காகத்தான் இருக்கப் போகிறது. ஏனென்றால் ஜனனி இது முறைப்படி வாங்கின சொத்து. அதை அபகரித்த தன்னுடைய குடும்பத்திடம் இருந்து எப்படியாவது மீட்டுக் கொடுக்க வேண்டும் என்ற முயற்சியில் தான் நாச்சியப்பன் இப்படி ஒரு முடிவை எடுத்திருப்பார்.