புதன்கிழமை, ஜனவரி 22, 2025

காயப்பட்ட சிங்கத்தின் வெறித்தனமான கர்ஜனை.. நெல்சனை அவமானப்படுத்திய மீடியா, ஜெயிலரால் ஏற்பட்ட மாற்றம்

Jailer-Nelson: இப்போது திரும்பும் பக்கம் எல்லாம் ஜெயிலர் பற்றிய பேச்சாக இருக்கிறது. நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டாரின் மாஸ் நடிப்பில் வெளியாகி இருக்கும் இப்படம் வெளியான இரண்டு நாட்களிலேயே 150 கோடி வரை வசூல் லாபம் பார்த்து பலரையும் மிரட்டி இருக்கிறது.

இனிவரும் நாட்களிலும் இதன் வசூல் ஏறுமுகமாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த அளவுக்கு ஜெயிலரையும், நெல்சனையும் ரசிகர்கள் கொண்டாடி தீர்க்கின்றனர். ஆனால் இதில் நாம் யோசிக்க வேண்டிய ஒரு விஷயமும் இருக்கிறது. அதாவது தற்போது பல சோசியல் மீடியா சேனல்களில் நெல்சனின் பேட்டி தான் வைரலாகி வருகிறது.

Also read: விஜய்யை மறைமுகமாக டேமேஜ் செய்யும் நெல்சன்.. சகுனியாக அடுத்தடுத்து படங்களுக்கு போட்ட பிள்ளையார் சுழி

ஆனால் இதற்கு முன்பாக அதாவது பீஸ்ட் படம் வெளியான சமயத்தில் அவர் எந்த அளவுக்கு ட்ரோல் செய்யப்பட்டார் என்பது அனைவருக்கும் தெரியும். அடுத்தடுத்து வெற்றியை கொடுத்த ஒரு இயக்குனர் ஒரு தோல்வியை கொடுத்ததற்கே அவருடைய எதிர்காலமே கேள்விக்குறியாகும் அளவுக்கு பல சம்பவங்கள் நடந்தது.

இன்னும் சொல்லப்போனால் ரஜினி படத்தை இயக்க இவர் தகுதி இல்லாதவர் என்று கூட பேச்சுக்கள் எழுந்தது. இதை சூப்பர் ஸ்டாரே கூட மேடையில் வெளிப்படையாக தெரிவித்து இருந்தார். ஆனால் அவர் மட்டும் நெல்சனுக்கான வாய்ப்பை கொடுக்கவில்லை என்றால் இந்த வெற்றி சாத்தியமாகி இருக்காது.

Also read: ரஜினிக்காக ஓடிவந்த சிவராஜ்குமார், மோகன்லால்.. ஜஸ்ட் மிஸ் ஆன பாலய்யா

அதாவது காயப்பட்ட சிங்கத்தின் கர்ஜனையாக தான் ஜெயிலர் வெளிவந்திருக்கிறது. எப்படியாவது தன்னை நிரூபிக்க வேண்டும் என்ற வெறியில் தான் நெல்சன் சூப்பர் ஸ்டாரை வைத்து தரமான ஒரு சம்பவத்தை நிகழ்த்திக் காட்டி இருக்கிறார். ஜெயிலர் ஏற்படுத்திய இந்த மாற்றம் நமக்கு ஒரு பாடமாகவும் இருக்கிறது.

அன்று நெல்சனை அவமானப்படுத்திய மீடியாக்கள் இப்போது தலையில் தூக்கி வைத்து கொண்டாடி வருகின்றனர். இருந்தாலும் இந்த புகழை நெல்சன் தலையில் ஏற்றவில்லை என்பது அவருடைய தற்போதைய பேட்டிகளில் வெளிப்படையாக தெரிகிறது. அந்த வகையில் தலைவர் சொன்ன மாதிரி குரைக்காத நாயும் இல்லை குறை சொல்லாத வாயும் இல்லை என்பது தான் ஜெயிலர் கற்றுக் கொடுத்த பாடம்.

Also read: 2 நாளில் சாதனை படைத்த ஜெயிலர்.. மிரள வைத்த வசூல், மூன்றாவது நாளில் நடக்கப் போகும் சம்பவம்

Trending News