Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்
ADVERTISEMENT

மன்னாதி மன்னர்களும் மண்ணை கவ்விய வரலாறு உண்டு.. கோமாளி அசீமை கதறவிட்ட தரமான சம்பவம்

மன்னாதி மன்னர்களும் மண்ணை கவ்விய வரலாறு உண்டு.. கோமாளி அசீமை கதறவிட்ட தரமான சம்பவம்

ப்போது வெளியான ப்ரோமோவில் கூட கமல் உங்களிடம் பேசும் அளவுக்கு எனக்கு பொறுமை இல்லை, கட்டப்பஞ்சாயத்து என்றால் என்ன என்று அவரை கண்டபடி வெளுத்து வாங்கி விட்டார்.

நேற்று ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது சோசியல் மீடியாவில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த ஷோ ஆரம்பித்த நாள் முதலில் இருந்தே பல விமர்சனங்களை சந்தித்து வருகிறது. அதிலும் எந்த சீசனிலும் இல்லாத வகையில் இந்த சீசன் போட்டியாளர்கள் ரொம்பவும் உக்கிரமாக இருப்பது பார்ப்பவர்களை எரிச்சல் படுத்தி வருகிறது.

அதில் ரசிகர்களின் தொடர் வெறுப்புக்கு ஆளாகி வரும் ஒரே போட்டியாளர் அசீம் மட்டும் தான். தேவையில்லாமல் கத்தி பேசுவது, ஹீரோயிசம் காட்டுவது, தன்னுடைய வெற்றிக்காக அடுத்தவரை மிதித்து முன்னேறுவது என அவருடைய செயல்பாடுகள் அனைத்தும் கண்டனத்திற்கு ஆளாகி வருகிறது. மேலும் கமல் கூட நிகழ்ச்சியில் இதை பலமுறை அவருக்கு சுட்டி காட்டினார்.

ஆனாலும் அவர் என் இஷ்டப்படி தான் நான் இருப்பேன் என்று முன்பு இருந்ததை காட்டிலும் இன்னும் முரட்டுத்தனமாக மாறி இருக்கிறார். அந்த வகையில் நேற்று ரேங்கிங் போட்டி நடைபெற்றது. அதில் முதலிடத்திற்காக அசீம், விக்ரமன் இருவரும் போட்டி போட்டனர். இதுதான் மிகப்பெரிய பிரச்சனைக்கு வழிவகுத்தது. அதாவது விக்ரமன் முதல் இடத்தை படிப்பதற்காக தன்னுடைய பக்கத்தை நியாயமாக பேசினார்.

ஆனால் அதற்கு அசீம் உங்களுடைய கட்டப்பஞ்சாயத்து வேலை எல்லாம் இங்கு காட்டாதீர்கள் என்று மிகவும் கீழ்த்தரமாக பேசினார். ஆனாலும் விக்ரமன் நிதானத்தை கடைப்பிடித்து அதை சாமர்த்தியமாகவே எதிர்கொண்டார். மேலும் மன்னாதி மன்னர்களும் மண்ணை கம்பிய வரலாறு உண்டு என நியாயமாக பேசினார்.

இதையெல்லாம் கேட்ட அசீம் என்னை பார்த்து உங்களுக்கு பயமா என்று தன்னைத்தானே ஹீரோ என்று நினைத்து கோமாளித்தனமாக பேசினார். தற்போது அவர் கூறிய கட்டப்பஞ்சாயத்து என்ற விஷயம் தான் பேசும் பொருளாகி இருக்கிறது. இப்போது வெளியான ப்ரோமோவில் கூட கமல் உங்களிடம் பேசும் அளவுக்கு எனக்கு பொறுமை இல்லை, கட்டப்பஞ்சாயத்து என்றால் என்ன என்று அவரை கண்டபடி வெளுத்து வாங்கி விட்டார்.

அப்போது மட்டும் அவர் ஒன்றுமே தெரியாத பச்சைப்பிள்ளை போல் முகத்தை வைத்துக்கொண்டு இருக்கிறார். இதைத்தான் தற்போது ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர். மேலும் இதன் மூலம் விக்ரமனுக்கு ஏற்கனவே இருந்த ரசிகர்களின் ஆதரவு இன்னும் அதிகரித்திருக்கிறது.

V

Vijay

விஜய்- Cinemapettai நிறுவனர். 13 ஆண்டுகள் தமிழ் சினிமா செய்தி ஆசிரியர், டிஜிட்டல் மார்கெட்டிங் மற்றும் கன்டெண்ட் ஸ்ட்ராட்டஜியில் அனுபவம் கொண்டவர்.