ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

ரோஜா சீரியலில் இருந்து விலகும் முக்கிய புள்ளி.. அடுத்த டிஆர்பியும் போச்சா சோனமுத்தா

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியலில் ஒன்றுதான் ரோஜா. இத்தொடர் கிட்டத்தட்ட 1100 எபிசோடுகளை தாண்டி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. ஆரம்பத்திலிருந்து இத்தொடரில் நடித்த பல கதாபாத்திரங்கள் மாற்றப்பட்டுள்ளனர். மேலும் இத்தொடரின் கதையும் வேறு திசைக்கு மாறிமாறிக் கொண்டு போயிருக்கின்றனர்.

ஆனாலும் ரோஜா தொடர் தற்போது வரை டிஆர்பியில் நல்ல இடத்தைப் பெற்று வருகிறது. இதற்கு முக்கிய காரணம் இத்தொடரின் ஹீரோ மற்றும் ஹீரோயின் தான். கன்னட நடிகரான சிபி சூரியன் அர்ஜுன் கதாபாத்திரத்திலும் பிரியங்கா நல்காரி ரோஜா என்ற கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார்கள்.

மேலும் வடிவுக்கரசி, காயத்ரி, டாக்டர் ஷர்மிளா, ராஜேஷ் போன்றோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இந்நிலையில் இத்தொடரில் அர்ஜுன் மற்றும் ரோஜா கதாபாத்திரம் பலராலும் கவரப்பட்டு உள்ளது. இவர்களின் ரொமான்ஸ் காட்சிகள் இடம் பெற்ற வாரம் டிஆர்பி எகிறும்.

இந்நிலையில் தற்போது இத்தொடரின் கதாநாயகன் சிபி சூரியன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் ஒரு டுவிட் செய்துள்ளார். அதாவது வருகின்ற ஆகஸ்ட் மாதத்துடன் ரோஜா தொடரிலிருந்து தான் விலகப் போவதாக அறிவித்துள்ளார். நீண்ட யோசனை மற்றும் தயாரிப்பு நிறுவனத்துடன் பேசித்தான் இந்த முடிவை எடுத்துள்ளதாக சிபி கூறியுள்ளார்.

மேலும் இது தவிர்க்க முடியாத சூழ்நிலையில் எடுக்கப்பட்டது. மேலும் அர்ஜுன் கேரக்டர் எனக்கு எப்போதுமே மிகவும் ஸ்பெஷலான கேரக்டர். அதுமட்டுமல்லாமல் எனது மனதிற்கு நெருக்கமான ஒன்று. மேலும் ரசிகர்களான உங்கள் அன்பிற்கு மிக்க நன்றி. நீங்கள் இல்லை என்றால் நான் இங்கு இல்லை.

sibbu-suryan

மேலும் மீண்டும் புதிய சுவாரசியமான பிராஜக்ட் உடன் தொடர்ந்து உங்களை என்டர்டைன்மென்ட் செய்து வருகிறேன், உங்கள் ஆதரவுக்கு நன்றி என சிபி சூரியன் பதிவிட்டுள்ளார். இதை அறிந்த ரசிகர்கள் ரோஜா தொடரில் இனி அர்ஜுனை பார்க்க முடியாதா என மிகுந்த கவலையில் உள்ளனர்.

Trending News