ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

நான் அவ்வளவு திறமையான ஆள் கிடையாது.. லியோ படத்தை மறுத்ததற்கு விஷால் கூறிய மொக்க காரணம்

Actor Vishal: மாஸ்டர் படத்திற்கு பிறகு விஜய்- லோகேஷ் கனகராஜ் கூட்டணி இரண்டாவது முறையாக தயாராகி இருக்கும் படம் தான் லியோ வரும் அக்டோபர் 19ஆம் தேதி ரிலீஸ் ஆக இருக்கும். இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

அது மட்டுமல்ல இந்த படத்தின் மீது உலகம் முழுவதும் இந்த எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் இருக்கின்றனர். இதில் விஜய் உடன் அர்ஜுன், மிஸ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், மன்சூர் அலிகான், திரிஷா உள்ளிட்ட முன்னணி பிரபலங்கள் பலரும் இணைந்து நடித்திருக்கின்றனர்.

Also Read: நெருப்பாய் இருக்கும் கோபத்தை வெளியில் காட்டாத விஷால்.. பொதுவெளியில் இருவரும் காட்டாத முகம்

இவர்களுடன் இந்த படத்தில் விஷாலும் நடிப்பதாக இருந்தது. ஆனால் அந்தப் படத்தை வேண்டாம் என நிராகரிப்பதற்கான மொக்க காரணத்தை தற்போது கூறியுள்ளார். மார்க் ஆண்டனி படத்தில் விஷால் நடித்துக் கொண்டிருக்கும் போது லோகேஷ் அந்த படப்பிடிப்பிற்கு சென்று லியோ படத்தில் கால் சீட் கேட்டிருக்கிறார்.

அதுவும் தொடர்ந்து நான்கு மாதங்கள் வேண்டும் என்று சொன்னாராம். உடனே விஷால் ஒரே நேரத்தில் இரண்டு படத்தில் நடிக்கும் அளவுக்கு நான் திறமைசாலி கிடையாது. அதனால் தான் லியோ படம் மிஸ் ஆயிடுச்சு என்று சமீபத்திய பேட்டி தெரிவித்துள்ளார்.

Also Read: மீண்டும் தயாரிப்பாளர் தலையில் சட்னி அரைக்கும் விஷால்.. யாருமே இல்லாத கடையில் டீ போட்டு என்ன பிரயோஜனம்

இதைக் கேட்டதும் ரசிகர்கள் பலரும், ‘ஆமா லியோ படத்தை விட வேறு நல்ல படத்துல நடிச்சு கிழித்து விடுற மாதிரி பேசுறத பாரு’ என சோசியல் மீடியாவில் விஷாலை வெளுத்து வாங்குகின்றனர். விஷால் தற்போது நடித்து முடித்துள்ள படம் தான் மார்க் ஆண்டனி.

இதனை ஆதி ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார். விஷாலுடன் ரித்து வர்மா, எஸ்ஜே சூர்யா, சுனில் உள்ளிட்ட பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். இந்த படம் வரும் செப்டம்பர் 15 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு ரிலீஸ் ஆகிறது.

Also Read: நண்டு சிண்டெல்லாம் இயக்குனராகுது, நம்ம மட்டும் இப்படியே இருக்கோமே.. ஜேசன் சஞ்சய்யை பார்த்து ஆதங்கப்படும் விஷால்

Trending News