புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

குறும்படம் போட்டு எல்லாரையும் ரோஸ்ட் செய்த ஆண்டவர்.. வீட்டை விட்டு துரத்தியடிக்கப்பட்ட நபர் இவர்தான்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி இந்த வாரம் ஆரம்பத்தில் இருந்தே ரணகளமாக இருக்கிறது. எப்போதுமே பிக் பாஸ் வீட்டில் சர்ச்சைகளுக்கும், சண்டைகளுக்கும் பஞ்சமில்லாமல் இருக்கும். ஆனால் இந்த வாரம் கொடுக்கப்பட்ட டாஸ்க் போட்டியாளர்களை கொலை வெறியுடன் நடமாட வைத்துவிட்டது.

அதிலும் டாஸ்கின் போது செரினா தடுமாறி கீழே விழுந்தது பெரும் புயலை கிளப்பியது. அதற்கு முழு காரணமும் தனலட்சுமி தான் என்று அசீம் உள்ளிட்ட பலரும் கூறி வந்தனர். ஆனால் உண்மையில் என்ன நடந்தது என்று ரசிகர்கள் ஆதாரத்துடன் கண்டுபிடித்து சோசியல் மீடியாவில் பரவ விட்டனர். அதன் மூலம் தனலட்சுமிக்கான ஆதரவும் அதிகரித்தது.

Also read : அசல் சும்மா இருந்தாலும் இவ விட மாட்டா போல.. பிக்பாஸ் வீட்டில் மாப்பிள்ளைக்கு அவ்வளவு வெறி

அந்த வகையில் இந்த வாரம் நிச்சயம் குறும்படம் உண்டு என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இன்றைய நிகழ்ச்சியில் கமல் போட்டியாளர்கள் அனைவரையும் நன்றாக ரோஸ்ட் செய்திருக்கிறார். அதிலும் இந்த வாரம் அசீமின் ஆட்டம் ரொம்பவும் அதிகமாக இருந்தது. ஏற்கனவே போன வாரத்தில் தேவையில்லாத வேலையை பார்த்து ஆண்டவரிடம் நன்றாக குட்டு வாங்கினார்.

ஆனாலும் அடங்காத அசீம் இந்த வாரமும் ஓவர் ஹீரோயிசம் காட்டி கடுப்பேற்றினார். அவரையும் இன்று ஆண்டவர் குறும்படம் போட்டு தன்னுடைய பாணியில் வச்சி செய்து இருக்கிறார். அது மட்டுமல்லாமல் ரசிகர்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்து வந்த ஒரு சம்பவமும் இன்று நடந்துள்ளது. அதாவது பிக் பாஸ் வீட்டில் டச்சிங் ஸ்டார் ஆக இருந்த அசல் இன்று வீட்டை விட்டு துரத்தி அடிக்கப்பட்டுள்ளார்.

Also read : பெரிய ஹீரோக்கள் எனக்குத் தேவையில்லை.. தோனி தேர்வு செய்த தமிழ் பிக்பாஸ் நடிகர்

பிக் பாஸ் வீட்டில் இருக்கும் பெண்களை தடவுவது, கட்டிப்பிடிப்பது, சில்மிஷம் செய்வது, கடிப்பது என்று அருவெறுப்பின் மொத்த உருவமுமாக இருப்பவர் அசல். அவருடைய நடவடிக்கைகள் நாளுக்கு நாள் மோசமானதை பார்த்த ரசிகர்கள் அவரை வீட்டை விட்டு விரட்டுங்கள் என்று கூறிவந்தனர். மேலும் அவருக்கு யாரும் ஓட்டு போடக்கூடாது என்றும் கூறினர்.

அதற்கேற்றார் போல் அவருக்கான வாக்குகளின் எண்ணிக்கையும் மிகவும் குறைவாகவே இருந்தது. அந்த வகையில் அசல் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு எலிமினேட் செய்யப்பட்டுள்ளார். இப்படி ரசிகர்கள் இந்த வாரம் முழுவதும் என்ன எதிர்பார்த்தார்களோ அப்படிப்பட்ட சுவாரஸ்யமான சம்பவம் தான் இன்றைய நிகழ்ச்சியில் காட்டப்பட இருக்கிறது. மேலும் இதுவரை இல்லாத அளவுக்கு ஆண்டவர் போட்டியாளர்கள் அனைவரையும் நன்றாகவே வெளுத்து வாங்கி இருக்கிறார். அதை கண்குளிர பார்க்கவும் ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

Also read : பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் 2வது போட்டியாளர்.. பெண்களிடம் அத்துமீறிய மன்மத குஞ்சு

Trending News