வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்த அந்த தருணம்.. களை கட்ட போகும் இன்றைய பிக்பாஸ் எபிசோட்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி நாளுக்கு நாள் ஆர்வத்தை அதிகப்படுத்தி கொண்டே இருக்கிறது. அதிலும் நேற்றைய எபிசோட் மரண மாஸ் ஆக இருந்தது. சென்ற வாரம் முதலே பிக்பாஸ் வீட்டில் ஏகப்பட்ட சண்டையும், சச்சரவும் நடந்து வந்தது. ஒருவருக்கொருவர் மனதில் இருக்கும் அத்தனை வஞ்சமும் வெளிப்பட்டது.

இதனால் நிகழ்ச்சியின் டிஆர்பி உயர்ந்தாலும், ரொம்பவும் ஓவராக நடந்து கொள்ளும் போட்டியாளர்களை கமல் லெப்ட் அண்ட் ரைட் வாங்க வேண்டும் என்று ரசிகர்கள் கோரிக்கை வைத்தனர். அந்த வகையில் நேற்றைய நிகழ்ச்சியில் கமல் படபட பட்டாசாக பொரிந்து தள்ளிவிட்டார். மேலும் இதைத்தான் எதிர்பார்த்தோம் வா தலைவா என்று ரசிகர்கள் ஆர்வத்துடன் நிகழ்ச்சியை பார்த்தனர்.

Also read:அசல் சும்மா இருந்தாலும் இவ விட மாட்டா போல.. பிக்பாஸ் வீட்டில் மாப்பிள்ளைக்கு அவ்வளவு வெறி

ஆண்டவரின் இந்த அதிரடி ஆட்டத்தை தாங்க முடியாத போட்டியாளர்களின் பாடுதான் பெரிய திண்டாட்டம் ஆகி போனது. மேலும் குறும்படம் எல்லாம் போட்டு காண்பித்து போட்டியாளர்களை ஆண்டவர் ஒரு வழி செய்து விட்டார். அதன் தொடர்ச்சியாக இன்றும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஏகப்பட்ட சுவாரசியங்கள் காத்துக் கொண்டிருக்கிறது.

அதில் நேற்று முழுவதும் குழப்பத்துடனே திரிந்த ஆயிஷாவுக்கு இன்று கமல் குட்டு வைக்கும் காட்சிகளும் காத்துக் கொண்டிருக்கிறது. அது மட்டுமல்லாமல் பிக் பாஸ் வீட்டில் நோகாம நுங்கு சாப்பிடும் போட்டியாளர்கள் யார் என்றும், சுயமாக யோசிக்காமல் மற்றவர் சொல்வதைக் கேட்கும் நபர் யார் என்ற சுவாரஸ்யமான விளையாட்டுகளும் இருக்கிறது.

Also read:பெரிய ஹீரோக்கள் எனக்குத் தேவையில்லை.. தோனி தேர்வு செய்த தமிழ் பிக்பாஸ் நடிகர்

இதற்கிடையில் நாமினேஷனில் இருக்கும் ஜனனி, மகேஸ்வரி, ஏடிகே ஆகியோர் சேவ் செய்யப்பட்டதையும் ஆண்டவர் அறிவிக்கிறார். அதை தொடர்ந்து இறுதி இடத்தில் இருக்கும் அசீம் மற்றும் அசல் இருவர்களில் யார் வெளியேறப் போகிறார்கள் என்பதையும் தெரிவிக்க இருக்கிறார்.

அதில் இத்தனை நாட்களாக ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த அந்த தருணம் நடக்க இருக்கிறது. அதாவது பிக் பாஸ் வீட்டில் தடவல் மன்னனாக இருக்கும் அசல் இன்று வீட்டை விட்டு வெளியேற்றப்பட இருக்கிறார். இதன் மூலம் நாமினேஷனில் இல்லாவிட்டாலும் நிவாஸினி சேவ் செய்யப்பட்டு விட்டார் என்று தான் சொல்ல வேண்டும். ஆதலால் களைகட்ட இருக்கும் இன்றைய நிகழ்ச்சியை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

Also read:குறும்படம் போட்டு எல்லாரையும் ரோஸ்ட் செய்த ஆண்டவர்.. வீட்டை விட்டு துரத்தியடிக்கப்பட்ட நபர் இவர்தான்

Trending News