வெள்ளிக்கிழமை, நவம்பர் 15, 2024

ஐபிஎல் வரலாற்றில் அதிக விலைக்கு போன வீரர்.. 35 வயதிலும் கொடி கட்டி பறக்கும் ஜாம்பவான்

Player who bought for Huge Amount in IPL: 2024ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் வருகிற 22 ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கவிருக்கிறது . முதல் போட்டியில், கடந்த ஆண்டு சாம்பியன் ஆன சென்னை சூப்பர் கிங்ஸை எதிர்த்து, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி மோதுகிறது.

ஒவ்வொரு அணியும் தங்களுக்கான வீரர்களை ஏற்கனவே தேர்வு செய்துள்ளது. பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என சரி சம அளவில் தங்களின் அணியை உருவாக்கி வருகிறது. இந்த ஆண்டு கிட்டத்தட்ட பத்து அணிகள் மோதவிருக்கிறது.

ஐபிஎல் போட்டியில் இதுவரை எந்த ஒரு வீரருக்கும் இல்லாத அளவிற்கு அதிக விலைக் கொடுத்து வேகப்பந்து வீச்சாளர் ஒருவரை எடுத்திருக்கிறது கொல்கத்தா நைட் ரைடர்ஸ். எப்படியாவது அந்த வீரரை எடுக்க வேண்டும் என ஏலத்தில் கௌதம் கம்பீர் கங்கணம் கட்டிக்கொண்டு இருந்தார்.

கே கே ஆர் அணி சுழற்பந்து யூனிட்டில் வலுவாக இருப்பதால் வேகப்பந்து வீச்சுக்கு ஒருவர் போதும் என்ற அளவில் இப்படி அதிக விலை கொடுத்து எடுத்திருக்கிறார்கள். சுனில் நரேன், வருண் சக்கரவர்த்தி, முஜிபுர் ரஹீம் போன்ற சுழற் பந்துவீச்சாளர்கள் இருப்பதால் ஒரு வேகப்பந்து வீச்சாளருக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்துள்ளார்கள்.

இந்த ஆண்டு நடைபெற்ற ஏலத்தில் அதிக விலை போன வீரர் மிச்சல் ஸ்டார்க் 24.75 கோடிகள் கொடுத்து அவரை தன் அணிக்காக கௌதம் கம்பீர் எடுத்துள்ளார். 35 வயதிலும் இப்படி பிரம்மாண்ட விலைக்கு ஏலம் போன முதல் வீரர் ஸ்டார்க் தான்.

- Advertisement -spot_img

Trending News