புதன்கிழமை, ஜனவரி 15, 2025

இந்த வருடத்தின் 5 மரண மொக்கை வாங்கிய படங்கள்.. ரெண்டு டாப் ஹீரோயின்களை நம்பி தலையில் துண்டை போட்ட தயாரிப்பாளர்

இந்த வருடம் தமிழ் சினிமாவின் வெற்றி வருடம் என்றே சொல்லலாம். நிறைய படங்கள் மிகப்பெரிய வெற்றியை இந்த வருடத்தில் பெற்றன. ஒரு சில படங்கள் ஒட்டுமொத்த இந்திய திரையுலகையும் கோலிவுட் பக்கம் திரும்பி பார்க்க வைத்தன. அதே நேரத்தில் தியேட்டரில் உட்கார முடியாமல் மக்கள் திணறிய மரண மொக்கை திரைப்படங்களும் இந்த ஆண்டு ரிலீசாகின.

பிரின்ஸ்: டான், டாக்டர் போன்ற வெற்றி படங்களை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடித்த திரைப்படம் தான் பிரின்ஸ். தெலுங்கு இயக்குனர் அனுதீப் இந்த படத்தை இயக்கியிருந்தார். சத்யராஜ்-சிவகார்த்திகேயன் காம்போ, வருத்தப்படாத வாலிபர் சங்கம் படம் போல் ஒர்க் அவுட் ஆகாமல் பயங்கரமாய் சொதப்பியது. சிவாவுக்கு இது மிகப்பெரிய தோல்வி படமாக அமைந்தது.

Also Read: சிவகார்த்திகேயன் தவறவிட்ட தேசிய விருது வாங்கிய படம்.

தி லெஜெண்ட்: இயக்குனர் ஜேடி ஜெர்ரி இயக்கத்தில், சரவணா ஸ்டோர்ஸ் ப்ரொடக்சனில், சரவண அருள் நடித்த திரைப்படம் தி லெஜெண்ட். முன்னணி ஹீரோக்களின் படங்களுக்கு இருந்த வரவேற்பு இந்த படத்திற்கு இருந்தது. ஆனால் தியேட்டரை விட்டு வெளியே வந்த மக்கள் படு மோசமாக இந்த படத்தை ஊற்றினர்.

பிரிடேட்டர்: பிரிடேட்டர் ஏற்கனவே பல வருடங்களுக்கு பின் ரிலீஸ் ஆகிய மிகப்பெரிய வெற்றி படமாகும். இதன் தொடர்ச்சியாக இந்த வருடம் இதன் அடுத்த பாகம் ரிலீஸ் ஆனது. இந்த படம் பல மொழிகளிலும் ரிலீஸ் செய்யப்பட்டது. ஆனால் முந்தைய பாகத்தை போல் இல்லாமல் ரசிகர்களுக்கு ஒரு மிகப்பெரிய ஏமாற்றத்தையே கொடுத்தது.

Also Read: விஜய் தேவரகொண்டாவை ஓரங்கட்டிய அண்ணாச்சி.. லிகர் படத்திற்கு கிடைத்த IMDB ரேட்டிங்

காத்துவாக்குல 2 காதல்: இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் காத்துவாக்குல 2 காதல். சமந்தா, நயன்தாரா என இரண்டு மாஸ் ஹீரோயின்களை இந்த படத்தில் ஒன்று சேர்த்து மிகப்பெரிய எதிர்பார்ப்பை கிளப்பினார் விக்கி. சமந்தா, நயன்தாரா, விஜய் சேதுபதி அவர்கள் பங்குக்கு சிறந்த நடிப்பை வெளிப்படுத்தினாலும், மேலோட்டமான கதைக்களத்தினால் படம் தோல்வியடைந்தது.

காபி வித் காதல்: சில வருடங்களாக திகில் கதைகளிலேயே கவனம் செலுத்தி வந்த இயக்குனர் சுந்தர் சி, மீண்டும் தன்னுடைய ரூட்டை கையில் எடுத்த திரைப்படம் தான் காபி வித் காதல். மிகப்பெரிய நட்சத்திர பட்டாளத்தோடு, காமெடி மற்றும் காதலை மைய்யமாக கொண்டு வெளியான இந்த படம் படு தோல்வியடைந்தது.

Also Read: சுந்தர் சி-யின் பட வசூலுக்கு ஆப்படித்த இளம் இயக்குனர்.. கவனிக்கப்படாமல் போன காபி வித் காதல்

Trending News