சனிக்கிழமை, டிசம்பர் 28, 2024

பாரதியை காப்பாற்ற முட்டாள்தனமான முடிவெடுத்த சௌந்தர்யா.. ஜோலியை முடிச்சுவிட்ட கண்ணம்மா!

விஜய் டிவியின் பாரதிகண்ணம்மா சீரியலில் வெண்பாவின் ஆட்டத்தை அடக்க வேண்டும் என்பதற்காக பாரதியின் அம்மா சௌந்தர்யா, வெண்பாவின் அம்மாவிடம் உடனடியாக வெண்பாவிற்கு திருமணத்தை நடத்த வேண்டும் என சொல்கிறார்.

இதற்கு வெண்பாவின் அம்மாவும் உறுதுணையாக இருப்பதால் உடனே வெண்பாவிற்கும் ரோஹித்திற்கும் நிச்சயதார்த்தத்தை தடபுடலாக ஏற்பாடு செய்கின்றனர். ஒருவேளை நிச்சயதார்த்தத்தில் ஏதாவது தடங்கல் செய்ய நினைத்தால் வெண்பாவை போலீசிடம் ஒப்படைத்து விடுவேன் என சௌந்தர்யா ஏற்கனவே எச்சரித்திருக்கிறார்.

Also Read: பாரதியுடன் திருமணக்கோலத்தில் வெண்பா அடிக்கும் லூட்டி!

இருப்பினும் வெண்பாவிற்கு இந்த நிச்சயதார்த்தத்தில் துளிகூட விருப்பம் இல்லாததால், ரோஹித்தின் சார்பில் நிச்சயதார்த்த தாம்பூலத் தட்டை கூட வாங்க, ஆள் இல்லாத ஒரு அனாதையை திருமணம் செய்து கொள்ள முடியாது என சபையில் வெண்பா அசிங்கப் படுத்துகிறார்.

அப்போது ரோஹித்திற்கு சாதகமாக சௌந்தர்யா எழுந்து, அவரை தன்னுடைய மூன்றாவது மகனாக தத்து எடுத்துக் கொள்கிறார். இதன்பிறகு ரோஹித்-வெண்பா இருவரின் நிச்சயதார்த்தம் சிறப்பாக நடந்து முடிகிறது.

Also Read: குண்டு சட்டிக்குள்ளே குதிரை ஓட்டும் கண்ணம்மா!

மாமியார் ஏற்கனவே வச்சு செஞ்சது பத்தாமல் மருமகள் கண்ணம்மாவும் வெண்பாவை கேலி கிண்டல் செய்கிறார். இதையெல்லாம் பொறுத்துக் கொள்ளாத வெண்பா, கோபத்தின் உச்சத்துக்கே சென்றாலும் அவரால் பதிலுக்கு எதுவும் செய்ய முடியவில்லை.

இப்படி பாரதிகண்ணம்மா சீரியலில் வில்லியாக மிரட்டி உருட்டி கொண்டிருந்த வெண்பாவை ரோஹித்துக்கு திருமணம் செய்து வைத்து அவருடைய ஆட்டத்தை சௌந்தர்யா அடக்க பார்க்கிறார். இதனால் வெறிகொண்ட வெண்பா மீண்டும் பாரதி-கண்ணம்மா இருவருக்கும் இடையே குடைச்சல் கொடுக்கத்தான் பார்ப்பார்.

Also Read: கட்டிப்பிடித்து எலும்பை உடைத்த சௌந்தர்யா!

Trending News