பிக்பாஸ் வீட்டுக்குள் இருக்கும் மர்மம்.. அலறியடித்து வெளியே ஓடிய பிரபலம்

ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது என்பதுதான் பிக்பாஸ் நிகழ்ச்சியின் தாரக மந்திரம். ஆனால் அந்த பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்தே ஒரு பிரபலம் மட்டும் அலறியடித்து ஓடி வந்திருக்கிறார். இந்த விஷயம் தான் தற்போது பரபரப்பு செய்தியாக பேசப்பட்டு வருகிறது.

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி நேற்று கோலாக்காலமாக ஆரம்பிக்கப்பட்டது. 20 போட்டியாளர்களுடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த நிகழ்ச்சி முதல் நாளிலேயே பயங்கர சுவாரசியத்தை ஏற்படுத்தியது. இதுவே நிகழ்ச்சியின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரிக்க வைத்துள்ளது.

Also read : ஓவியாவிற்கு டஃப் கொடுக்கும் பிக் பாஸ் சீசன் 6 போட்டியாளர்.. அறிமுகமாவதற்கு முன்பே ஆர்மியா?

இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் ஏதோ வினோதமான சத்தங்கள் கேட்பதாக நடிகை ரட்சிதா மகாலட்சுமி பயந்து போய் கூறி இருக்கிறார். நேற்று பிக் பாஸ் வீட்டில் முதல் நாமினேஷன் நடைபெற்றது. அதில் தேர்ந்தெடுக்கப்பட்ட நான்கு நபர்கள் அடுத்த வார நாமினேசன் பட்டியலில் இணைவார்கள் என்று அறிவிக்கப்பட்டது.

அது மட்டுமல்லாமல் அந்த போட்டியாளர்கள் அனைவரும் வீட்டிற்கு உள்ளே அனுமதிக்கப்படவில்லை. இரவில் கூட அவர்கள் வெளியில்தான் படுத்திருந்தனர். அப்போது வீட்டிற்குள் தூங்கிக் கொண்டிருந்த ரட்சிதா மகாலட்சுமி திடீரென எழுந்து வீட்டை விட்டு வெளியில் வந்தார்.

நட்ட நடு ராத்திரியில் அவர் வெளியில் வந்ததை பார்த்த அந்த நான்கு பேரும் என்ன ஆச்சு, தூங்காம எதுக்கு வெளில வந்துருக்கீங்க என்று அவரிடம் விசாரித்து இருக்கின்றனர். அதற்கு அவர் நான் தூங்கும் போது ஜிபி முத்து சிரிப்பது போன்ற சத்தம் எனக்கு கேட்டது.

Also read : பிக்பாஸில் 20 போட்டியாளர்களுக்கும் தெரிந்த ஒரே முகம்.. ஓவர் நைட்டில் ட்ரெண்டான சம்பவம்

ஆனால் திரும்பிப் பார்த்தால் அங்கு அவர் தூங்கிக் கொண்டுதான் இருந்தார். அதன் பிறகு சிறிது நேரம் கழித்து வேறு யாரோ பேசும் சத்தம் எனக்கு தெளிவாக கேட்டது. ஆனால் வீட்டில் எல்லோரும் தூங்கிக் கொண்டுதான் இருந்தார்கள்.

அதனால் எனக்கு அங்கு தூங்குவதற்கு பயமாக இருக்கு என்று பதட்டத்துடன் அவர் கூறி இருக்கிறார். ஏற்கனவே பிக் பாஸ் வீடு வடிவமைக்கப்பட்டிருக்கும் அந்த இடத்தில் ஒரு அமானுஷ்யம் சுற்றி வருவதாக ஒரு செய்தி பரவியது.

இப்போது ரட்சிதா கூறுவதை பார்த்தால் அங்கு ஏதோ ஒரு மர்மம் இருப்பதாகவே தெரிகிறது. மேலும் ரட்சிதாவுக்கு ஏற்பட்ட இந்த அமானுஷ்ய அனுபவம் மற்ற போட்டியாளர்களுக்கும் இருந்ததா என்பது கூடிய விரைவில் தெரியும்.

Also read : மெர்சலாக்கிய விஜய் டிவி.. பாலிவுட் ஸ்டைலில் இருக்கும் பிக்பாஸ் வீட்டின் செலவு மட்டும் இவ்வளவா?

Advertisement Amazon Prime Banner