சனிக்கிழமை, டிசம்பர் 28, 2024

இனி என்னோட பாதை சிங்கப் பாதை.. வெறியோடு களமிறங்கும் பிக்பாஸ் வீட்டின் புது கேப்டன்

Biggboss 7: பிக்பாஸ் நிகழ்ச்சி முக்கால்வாசி கிணறை தாண்டிவிட்டது. இன்னும் சில வாரங்களே பைனலுக்கு இருக்கும் நிலையில் விளையாட்டின் சுவாரசியத்தை அதிகரிக்கவும் விஜய் டிவி பல விஷயங்களை மேற்கொண்டு வருகிறது.

அதில் இந்த வார இறுதியில் கமல் போட்டியாளர்களுக்கு பல அறிவுரைகளை வழங்கி இருந்தார். அதனால் இந்த வாரம் கொஞ்சம் சுவாரஸ்யமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே போன்று நேற்று மணி தனக்கு கிடைத்த கமெண்ட்டுகளை வைத்து ஒரு முடிவுக்கு வந்திருந்தார்.

Also read: ஓவர் கெத்து காட்டிய விச்சு, அச்சு.. ஒரே நாளில் ஆட்டத்தை மாற்றிய பிக்பாஸ்

இனிமேல் தேவையில்லாமல் பேசமாட்டேன். என்டர்டெயின்மென்ட் செய்வேன் என்று ரவீனாவுக்கு வாக்கும் கொடுத்தார். அதை தொடர்ந்து மாயா, விஜய் ஆகியோருடன் இணைந்து கேப்டனுக்கான போட்டிக்கும் தேர்வானார்.

இதில் மணி தற்போது வெற்றி பெற்றுள்ளார். ஆனால் வீட்டில் இருக்கும் அனைவரும் விஜய் வர்மா வர வேண்டும் என்று தான் நினைத்தார்கள். ஆனால் இந்த வாரம் பிக் பாஸ் எதிர்பாராததை எதிர்பார்க்க வைத்திருக்கிறார்.

அதன்படி நேற்று மணி இனிமே என்னோட பாதை சிங்கப்பாதை என சூப்பர் ஸ்டார் மாதிரி பேசி இருந்தார். அந்த வெறியோடு அவர் புது கேப்டனாக களம் இறங்கினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. ஏனென்றால் கடந்த வாரம் கேப்டனாக இருந்த விஷ்ணுவை கமல் வச்சு செய்தார்.

Also read: ஆண்டவரால கூட இந்த சீசனை காப்பாத்த முடியல.. 70 நாளாகியும் ஒரு ஆணியும் புடுங்காத பிக்பாஸ்

அதெல்லாம் புது கேப்டன் கண் முன்னாடி நிச்சயம் வந்து போகும். அந்த வகையில் இந்த வார பிக் பாஸ் வீடு மணியின் தலைமையில் களைக்கட்டுமா அல்லது கலை இழந்து போகுமா என்பதை நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். எதிர்பாராததை எதிர்பாருங்கள்.

Trending News