வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

மணிகண்டனை தொடர்ந்து வெளியேறும் அடுத்த போட்டியாளர்.. டிக்கெட் to பினாலேவால் விறுவிறுப்பான பிக்பாஸ்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி இன்னும் சில நாட்களில் முடிவுக்கு வர இருக்கிறது. கடந்த சீசன்களை போல் இல்லாவிட்டாலும் ஓரளவுக்கு ரசிகர்களை கவர்ந்த இந்த நிகழ்ச்சியின் வெற்றியாளர் யார் என்பதுதான் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் கடந்த வாரம் மணிகண்டன் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். அவரை தொடர்ந்து இந்த வாரம் யார் வெளியேறப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு அனைவருக்கும் இருக்கிறது. அதன்படி டிக்கெட் to பின்னாலே டாஸ்க் இப்போது பிக்பாஸ் வீட்டில் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. அதற்காக கடும் உழைப்பை கொடுத்து வரும் போட்டியாளர்களுக்கு இந்த வாரம் யார் வெளியேறப் போகிறார் என்றார் பதட்டமும் இருக்கிறது.

Also read: டிக்கெட் டூ பினாலே ஜெயிக்க போறது இவர்தான்.. சேனலின் மானத்தை காப்பாற்ற மட்டமான வேலை செய்யும் விஜய் டிவி

மேலும் இந்த வாரம் அசீம் மட்டும் நாமினேஷனில் இடம்பெறவில்லை. இதற்கு முன்பு நடந்த டாஸ்க் ஒன்றில் அவர் வெற்றி பெற்ற காரணத்தால் இந்த நாமினேஷனில் இருந்து அவர் எஸ்கேப் ஆகி இருக்கிறார். அப்படியே அவர் நாமினேட் செய்யப்பட்டு இருந்தாலும் எப்படியும் அவருடைய ரசிகர்கள் அளவுக்கு அதிகமான ஓட்டுப் போட்டு அவரை காப்பாற்றி விடுவார்கள்.

அவரைத் தொடர்ந்து வீட்டில் இருக்கும் மற்ற அனைவரும் இந்த வார நாமினேஷனில் இடம் பிடித்திருக்கிறார்கள். அதில் விக்ரமன், சிவின், கதிரவன், ரட்சிதா, அமுதவாணன் ஆகியோருக்கு கணிசமான ஓட்டுக்கள் கிடைத்திருக்கிறது. அவர்களுக்கு அடுத்தபடியாக இருக்கும் மைனா நந்தினி, ஏ டி கே ஆகியோருக்கு தான் குறைந்த ஓட்டுகள் வந்துள்ளது.

Also read: சுடச்சுட வெளியான 13 வது வார நாமினேஷன் லிஸ்ட்.. 7 பேரில் உறுதியாக வெளியேறும் போட்டியாளர்

இந்த ஓட்டு எண்ணிக்கை இன்னும் இரண்டு நாட்களுக்கு நடைபெறும் என்றாலும் இவர்கள் இருவரும் தான் இந்த வீட்டை விட்டு வெளியேறுவதற்கு அதிக வாய்ப்பு இருக்கும் என்று கருத்து கணிப்பு கூறுகின்றது. அந்த வகையில் மைனா நந்தினி பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறுவதற்கு தான் அதிக வாய்ப்புகள் இருக்கிறது.

கடந்த வாரம் அவருடைய கணவர் பிக் பாஸ் வீட்டுக்கு வந்திருந்த போதே அவர் இந்த நிகழ்ச்சிக்கு பொருத்தமானவர் இல்லை என்று கூறியிருந்தார். அதேதான் ரசிகர்களின் எண்ணமுமாக இருக்கிறது. மேலும் அவர் இவ்வளவு நாட்கள் இந்த வீட்டில் இருந்ததே பெரிய விஷயம். அதனால் இந்த வாரம் அவர் எலிமினேட் செய்யப்பட்டால் அதில் பெரிய ஆச்சரியம் ஒன்றும் இருக்கப் போவதில்லை.

Also read: பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய மணிகண்டன்.. 83 நாட்களுக்கு மொத்தமாக வாங்கிய சம்பளம்

Trending News