திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

உலகநாயகனின் அடுத்த டார்கெட் தளபதி.. கூட்டணியில் சேர்ந்த இங்கிலீஷ் பேசும் இயக்குனர்

உலகநாயகன் கமலஹாசன் விக்ரம் திரைப்படத்தின் வெற்றிக்குப் பின் தொடர்ந்து அடுத்தடுத்த திரைப்படங்களில் நடிக்க ஆயத்தமாகி வருகிறார்.மேலும் கமலஹாசனின் ராஜ்கமல் இன்டர்நேஷனல் தயாரிப்பு நிறுவனம் மூலமாக பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களை தயாரிக்கும் பணியில் இறங்கியுள்ளார்.

இதனிடையே நடிகர் சிவகார்த்திகேயன் கூடிய விரைவில் அவரது நடிப்பில் உருவாகி வரும் அயலான்,மாவீரன் உள்ளிட்ட திரைப்படங்களை முடித்துவிட்டு கமலஹாசனின் தயாரிப்பில் நடிப்பார் என்ற தகவல் உறுதியாகியுள்ள நிலையில், அடுத்தபடியாக நடிகர் சிம்புவின் நடிப்பில் ஒரு படத்தை கண்டிப்பாக தயாரிப்பேன் என கமலஹாசன் உறுதி அளித்துள்ளார்.

Also Read: கௌதம் மேனனுக்கு கண்டிஷன் போட்ட விஜய்.. புலம்பித் தவிக்கும் இயக்குனர்

மேலும் உதயநிதி ஸ்டாலின், ஜெயம் ரவி, சூர்யா, விஜய் சேதுபதி என பல நடிகர்களின் நடிப்பில் திரைப்படத்தை தான் தயாரிக்க உள்ளதாகவும் கமலஹாசன் பெரிய லிஸ்ட் போட்டு திட்டம் தீட்டி உள்ளார். இந்நிலையில் தற்போது சூடுபிடிக்கும் செய்தியாக தளபதி விஜயின் நடிப்பில் திரைப்படத்தை தயாரிப்பதில் மும்முரம் காட்டி வருகிறாராம் உலகநாயகன் .

ஏற்கனவே, இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன், அண்மையில் நடந்த ஒரு பேட்டியில், தளபதி விஜயின் நடிப்பில் காதல் கதையுள்ள ரொமான்டிக் திரைப்படம் ஒன்றை இயக்க விரும்புவதாக தெரிவித்திருந்தார் இதனிடையே இத்திரைப்படத்தை கமலஹாசன் இயக்க உள்ளார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

Also Read: தளபதி 67 இன்னும் ஆரம்பிக்கவே இல்ல.. பல கோடி ரூபாய் லாபம் பார்த்த விஜய்

நடிகர் சிம்பு நடிப்பில், கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் பார்ட் 1 வரும் செப்டம்பர் 15-ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், இத்திரைப்படத்தின் பார்ட் 2 ஷூட்டிங்கை கூடிய விரைவில் முடித்துவிட்டு அதன்பின் நடிகர் விஜய்யின் கூட்டணியில் இணையலாம் என கவுதம் வாசுதேவ் மேனன் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் உலக நாயகன் கமலஹாசன் தயாரிப்பில்,விஜய்யின் நடிப்பில், கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் கூடிய விரைவில் திரைப்படம் உருவாக இருப்பதாக தற்போது கோலிவுட் வட்டாரத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது மேலும் கூடிய விரைவில் இதற்கான அப்டேட் வெளியாக உள்ளது.

Also Read: லோகேஷ் கூப்பிட்டும் நடிக்க மறுத்த ஸ்டைலிஷ் வில்லன்.. தளபதி 67 கொடுக்கப் போகும் மாஸ் என்ட்ரி

Trending News