தமிழ் சினிமாவில் ஆட்சி செய்த ஒட்டுமொத்த நடிகர்களும் ஒரே படத்தில் நடிப்பது என்பது மிகவும் ஆச்சரியமான விஷயம்தான். அவ்வாறு நடிப்பு சக்கரவர்த்திகள் என போற்றப்படும் சிலர் ஒரே படத்தில் இணைந்து நடித்துள்ளனர். அந்த அற்புதச் செயல் உலக நாயகன் கமலஹாசன் படத்தில் தான் நிகழ்ந்துள்ளது.
கமலஹாசன் தன்னுடைய படங்களில் எப்போதுமே புதுவித தொழில்நுட்பத்தை பயன்படுத்த கூடியவர். மேலும் சினிமாவுக்காக பல அர்ப்பணிப்புகள் செய்பவர். யாரும் நினைத்துக்கூட பார்க்க முடியாத பல கெட்டப்புகளில் நடித்து ரசிகர்களை கவர்ந்துள்ளார். அவ்வாறு கமல் நடிப்பில் 1989இல் வெளியான திரைப்படம் அபூர்வ சகோதரர்கள்.
இப்படத்தை சிங்கீதம் சீனிவாசராவ் இயக்க கமலஹாசன் தனது ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் மூலம் தயாரித்தார். இப்படத்திற்கு வசனம் கமல்ஹாசனின் நண்பர் கிரேசி மோகன் எழுத இளையராஜா இசையமைத்திருந்தார். இப்படத்தில் கமலஹாசன் அப்பு மற்றும் ராஜா என இரண்டு வேடங்களில் நடித்திருந்தார்.
இப்படத்தில் அப்பு என்ற கதாபாத்திரத்தில் கமல்ஹாசன் குள்ளமாக நடிக்க பல யுக்திகளை பயன்படுத்தி இருந்தார். தற்போது வரை இது எப்படி சாத்தியமானது என்பது பலரது கேள்வியாக உள்ளது. மேலும் கமல் இதை தற்போது வரை ரகசியமாக வைத்துள்ளார். இப்படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகர் என்ற தமிழக அரசு விருதையும் கமலஹாசன் பெற்றார்.
கமல், நாகேஷ், ஜெய் சங்கர்கௌதமி, மனோரமா, ஜனகராஜ், மௌலி, டெல்லிகணேஷ், நாசர், ஸ்ரீவித்யா போன்ற 10 நடிப்பு ஜாம்பவான்கள் ஒட்டுமொத்தமாக இப்படத்தில் நடித்துள்ளனர். இந்த படம் தமிழ் சினிமா நட்சத்திர சங்கமம் என்றே கூறலாம்
இவ்வாறு பல சாதனைகளை அபூர்வ சகோதரர்கள் படம் புரிந்துள்ளது. இப்படம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரது ரசனைக்கு ஏற்றாற்போல் இருந்தது. இதுபோன்ற மீண்டும் ஒரு படம் தமிழ் சினிமாவில் வருமா என்ற ஏக்கத்தில் ரசிகர்கள் உள்ளனர்.