புதன்கிழமை, ஜனவரி 22, 2025

25 வருடமாகியும் மக்கள் கொண்டாடும் சன்டிவியின் ஒரே சீரியல்.. கலாநிதி மாறனை புகழ்ந்து தள்ளிய நடிகை

தொலைக்காட்சி பெட்டிகள் வந்த காலக்கட்டத்தில் மக்கள் அனைவரும் பாடல்களை பார்ப்பது, செய்திகளை பார்ப்பது என இது மட்டுமே பொழுதுபோக்காக அமைந்தது. அனால் தொலைக்காட்சிகளில் சீரியல் என்ற புரட்சியை முதன் முதலில் தோற்றுவித்தது தான் சன் டிவி. இப்போது காலை 11 முதல் இரவு 11 மணி வரை ஒளிபரப்பாகும் ஒவ்வொரு சீரியலுக்கும் தனி தனி ரசிகர்கள் இருக்கும் நிலையில், ஒரு சீரியல் முடிந்து 25 வருடங்களாகியும் அந்த ஒரு தொடருக்கு இப்போது வரை ரசிகர்கள் ஏராளம்.

அது தான் இயக்குனர் சி.ஜே.பாஸ்கர் இயக்கத்தில் நடிகை ராதிகா நடிப்பில் உருவான இந்த சீரியல் சன் டிவியில் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகும். பெண்களின் முன்னேற்றம், பெண் என்பவள் ஆணுக்கு நிகரானவள் என்பதை தனது நடிப்பின் மூலமாக ஒவ்வொரு இல்லத்தரசிகளின் மனதிலும் சித்தியாக நின்றார் நடிகை ராதிகா. இசையமைப்பாளர் தீனா இசையில், பாடகி நித்யஸ்ரீ பாடிய கண்ணின் மணி என்ற சித்தி டைட்டில் பாடல் இன்று வரை 90 ஸ் கிட்ஸ்களுக்கு விருப்பமானது.

Also Read : வரலட்சுமியை நம்பி பிரயோஜனம் இல்லை.. ராதிகா-சரத்குமார் எடுத்த அதிரடி முடிவு!

1999ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த சீரியல் 2001 ஆம் ஆண்டு வரை கிட்டத்தட்ட 467 எபிசோடுகளுடன் முடிவுப் பெற்றது. அப்படிப்பட்ட இந்த சீரியலின் 25 வருட கொண்டாட்டம் குறித்து நடிகை ராதிகா மனம் நெகிழ பேசிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. முதலில் சித்தி சீரியலை இன்று வரை பேசப்பட வைத்த ரசிகர்களுக்கு தனது மனமார்ந்த நன்றியை தெரிவித்தார் ராதிகா.

மேலும் சித்தி சீரியலில் பணியாற்றிய ஒவ்வொரு கலைஞர்கள், நடிகர்களுக்கும் நன்றியை தெரிவித்த இவர், சன் டிவி நிறுவனர் கலாநிதிமாறனை புகழ்ந்து பேசினார். அவர் ஒரு திறமையானவர் என்றும் நல்ல கதையை அவரால் மேலும் ஒரு நல்ல கதையாக மாற்றி வெற்றியை கொடுக்கமுடியும் என்று ராதிகா தெரிவித்தார்.

Also Read : ராதிகாவுக்கு முன் பிரபல நடிகைக்கு தூண்டில் போட்ட சரத்குமார்.. தாயாரால் சாமர்த்தியமாக தப்பித்த நாயகி!

சித்தி சீரியல் முடிந்தவுடன் அண்ணாமலை, செல்வி, செல்லமே, வாணி ராணி என அத்தனை சீரியலும் வெற்றியடைந்ததற்கு காரணம் கலாநிதிமாறன் என உணர்ச்சிபொங்க தெரிவித்தார். இதுபோல ஒரு சீரியலில் நடிக்க இன்று வரை தனக்கு வாய்ப்பு இருப்பதாகவும், ஆனால் காலங்கள் மாற மாற அதனை அப்படியே விட்டு விட்டு வருவதாகவும் ராதிகா தெரிவித்துள்ளார். நடிகை ராதிகா கடைசியாக சித்தி 2 தொடரில் நடித்து வந்த நிலையில், இத்தொடரின் கதைக்களம் சற்று வேறுப்பட்டதால் சில எபிசோடுகளிலே அவர் அந்த சீரியலை விட்டு சென்றார். இதுவும் கிட்டத்தட்ட 580 எபிசோடுகளை தாண்டி சாதனை படைத்தது என்று தான் கூற வேண்டும்.

இந்நிலையில் தற்போது வரை ராதிகா சன் டிவி சீரியலில் நடிக்காமல் படங்களில் தொடர்ச்சியாக கமிட்டாகி வருகிறார். எத்தனை சீரியல்கள் இன்று சேனல்களுக்கு சேனல் வந்துள்ளது, ஆனால் என்றுமே மறக்க முடியாத சித்தி 90 ஸ் கிட்ஸ்களின் மனதில் நீங்கா இடம் பெற்றிருக்கும். சித்தி 25 வருடங்கள் வரை சீரியல் உலகில் சிறந்த சீரியலாக வலம் வருவது என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read : மதிக்காத ராதிகா, கெஞ்சிய கமலஹாசன்.. பின் ஆண்டவர் வச்ச கச்சேரி!

Trending News