Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்

‘ஒஸ்தி’ வைப் மீண்டும் வருது! போலீஸ் அதிகாரியாக மிரட்ட வரும் சிம்பு – தயாரிப்பில் ஏஜிஎஸ் vs லலித் குமார்!

‘ஒஸ்தி’ வைப் மீண்டும் வருது! போலீஸ் அதிகாரியாக மிரட்ட வரும் சிம்பு – தயாரிப்பில் ஏஜிஎஸ் vs லலித் குமார்!

சிம்பு மற்றும் ‘ட்யூட்’ பட இயக்குநர் கீர்த்தீஸ்வரன் இணையும் புதிய படத்தைத் தயாரிக்கத் திட்டமிட்டிருந்த சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம், தற்போது அப்படத்திலிருந்து விலகியுள்ளது.

இதையடுத்து, இப்படத்தைத் தயாரிக்க ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர் லலித் குமார் ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

‘ஒஸ்தி’ படத்திற்குப் பிறகு சிம்பு மீண்டும் காவல்துறை அதிகாரியாக நடிக்கவுள்ள இப்படத்தில், சுமார் 10 ஆண்டுகளுக்குப் பிறகு நயன்தாரா அவருக்கு ஜோடியாக நடிக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. தயாரிப்பு நிறுவனம் இறுதியானதும், டிசம்பர் மாதத்தில் படப்பிடிப்பைத் தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மறுபுறம், வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் ‘அரசன்’ படத்தின் படப்பிடிப்பு தாமதமாகி வருகிறது. இதனால், சிம்பு – அஸ்வத் மாரிமுத்து கூட்டணியில் உருவாகவிருந்த திரைப்படமும் தள்ளிப்போயுள்ளது.

அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் சிம்பு நடிக்கவிருந்த இப்படம், ஃபேண்டஸி கலந்த கமர்ஷியல் என்டர்டெய்னராகவும், விண்டேஜ் சிம்பு பாணியிலும் உருவாகும் என்று இயக்குநர் ஏற்கனவே தெரிவித்திருந்தார். தற்போது இப்படம் தள்ளிப்போயுள்ள நிலையில், ரஜினிகாந்தின் ‘தர்மன்’ படத்தை முடித்த பிறகே அஸ்வத் மாரிமுத்து இத்திட்டத்தைத் தொடங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

S

Suriya

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.