Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்
ADVERTISEMENT

நெல்சனின் கரடுமுரடான பாதை.. ஒரு நாள் இவரும் சாதிப்பார்

நெல்சனின் கரடுமுரடான பாதை.. ஒரு நாள் இவரும் சாதிப்பார்

இயக்குனர் நெல்சன் திலீப்குமார் கோலமாவு கோகிலா என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானார். அதன்பிறகு சிவகார்த்திகேயனை வைத்து டாக்டர் படத்தை இயக்கி மிகப்பெரிய வெற்றிகண்டார். இதைத்தொடர்ந்து விஜய்யின் பீஸ்ட் படத்தை இயக்கும் வாய்ப்பு நெல்சனுக்கு கிடைத்தது. […]

இயக்குனர் நெல்சன் திலீப்குமார் கோலமாவு கோகிலா என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானார். அதன்பிறகு சிவகார்த்திகேயனை வைத்து டாக்டர் படத்தை இயக்கி மிகப்பெரிய வெற்றிகண்டார். இதைத்தொடர்ந்து விஜய்யின் பீஸ்ட் படத்தை இயக்கும் வாய்ப்பு நெல்சனுக்கு கிடைத்தது.

இப்படத்தின் ரிலீசுக்கு முன்பாகவே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படத்தை இயக்கும் வாய்ப்பை நெல்சன் பெற்றார். மிகக்குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகர்களின் படத்தை இயக்கும் வாய்ப்பு நெல்சன்னுக்கு கிடைத்துள்ளது. இதனால் இவர் மிகவும் அதிர்ஷ்டமானவன் என பலரும் கூறிவருகிறார்கள்.

ஆனால் இந்த உயரத்தை தொட நெல்சனுக்கு 15 வருடங்கள் ஆனது. ஆரம்பத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பல்வேறு தொடர்கள் மற்றும் ரியாலிட்டி ஷோக்களில் அசிஸ்டெண்ட் டைரக்டராக நெல்சன் வேலை பார்த்தார். விஜய் டிவியின் பிரபல தொடரான கனா காணும் காலங்கள் நாடகத்தை நெல்சன் இயக்கியிருந்தார்.

இதைத் தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் நெல்சன் வேலை பார்த்துள்ளார். இதன் மூலம் வெள்ளித்திரைக்கு செல்லும் வாய்ப்பு நெல்சனுக்கு கிடைத்தது. எல்லோரும் அவருடைய முதல் படம் கோலமாவு கோகிலா என நினைப்பார்கள்.

ஆனால் நெல்சனின் முதல் படம் வேட்டை மன்னன். இப்படத்தில் சிம்பு கதாநாயகனாக நடித்திருந்தார். ஒரு சில காரணங்களால் இப்படம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இதனால் மிகுந்த மன வேதனையில் இருந்த நெல்சன் மீண்டும் விஜய் டிவியிலே தனது பணியை தொடர்ந்து பணியாற்றி வந்தார்.

அதன் பிறகு நெல்சன் நயன்தாராவுக்கான கதையை முதலில் விக்னேஷ் சிவனிடம் கூறியுள்ளார். நயன்தாராவிற்கு கதை பிடித்து போக இப்படத்தில் நடிக்க சம்மதித்தார். படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற தொடங்கியது. அதன்பிறகு நெல்சன் பட்டிதொட்டியெல்லாம் பிரபலமானார். இவ்வாறு பல கரடு முரடான பாதைகளை கடந்து தான் நெல்சன் இந்த உயரத்தை அடைந்துள்ளார்.

A

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.