ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

விக்ரம் வசூலை மிஞ்சுவதற்கு போராடும் கமலஹாசனின் புகைப்படம்.. ஹாலிவுட் லெவலுக்கு தயாராகும் இந்தியன்-2

சங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் இந்தியன் 2 திரைப்படத்தின் ஷூட்டிங் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. அனிருத் இசையில் லைக்கா ப்ரொடக்ஷன் தயாரிப்பில் காஜல் அகர்வால், சித்தார்த், ப்ரியா பவானி சங்கர் உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் நடித்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு பிகார், திருப்பதி உள்ளிட்ட இடங்களில் நடைபெற்றது.

அதைத்தொடர்ந்து தற்போது சென்னை அருகே சதுரங்கப்பட்டினத்தில் ஷூட்டிங் நடைபெற்று வருகிறது. அங்கு படத்தின் சண்டைக் காட்சிகள் அனைத்தும் விறுவிறுப்பாக படமாக்கப்பட்டு கொண்டிருக்கிறது. அதில் கமலும் மிகவும் உற்சாகத்துடன் பங்கேற்று வருகிறார். மேலும் இதற்காக வெளிநாட்டில் இருந்து ஸ்பெஷல் பயிற்சியாளர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

Also read: அஜித் கழட்டிவிட்ட இயக்குனருக்கு தோள் கொடுக்கும் கமல்.. இவரை நம்பி இவ்வளவு பெரிய பட்ஜெட்டில் படமா.?

அவர்களுடன் கமல் பேசிக் கொண்டிருக்கும் போட்டோ ஒன்று தற்போது வெளியாகி உள்ளது. அதில் பயிற்சியாளர்கள் அனைவரும் இந்தியன் 2 போஸ்டர் போட்ட டீ ஷர்ட் அணிந்தபடி இருக்கின்றனர். அவர்களுடன் கமல் மிகவும் உற்சாகமாக பேசி சிரித்தபடி இருக்கிறார். இந்த போட்டோ தற்போது சோசியல் மீடியாவில் மிக வேகமாக ஷேர் செய்யப்பட்டு வைரலாகி வருகிறது.

மேலும் வெளிநாட்டில் இருந்து ஸ்பெஷல் டீம் வந்திருப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரிக்க வைத்துள்ளது. அது மட்டுமல்லாமல் படம் நிச்சயம் ஹாலிவுட் தரத்திற்கு நிகராக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அந்த அளவுக்கு சங்கர் இந்த படத்திற்காக மெனக்கிடுகிறார் என்பது அனைவரும் அறிந்தது தான். அதை உறுதி செய்யும் வகையில் தற்போது வெளிவரும் ஒவ்வொரு போட்டோவும் ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறது.

Also read: கடைசியில் சிக்கிய ஆடு.. சிவகார்த்திகேயனை தொடர்ந்து கமல் பிரியாணி போடப் போகும் ஹீரோ

ஏற்கனவே கமல் ரசிகர்கள் விக்ரம் திரைப்படத்திற்கு பிறகு அவருடைய அடுத்த அவதாரத்தை காண பல மாதங்களாக காத்திருக்கின்றனர். அந்த வகையில் மிகப்பெரும் பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டு வரும் இந்த திரைப்படம் வரும் தீபாவளிக்கு வெளியாகும் என்ற ஒரு தகவலும் பரவி அனைவரின் ஆர்வத்தையும் தூண்டி வருகிறது.

ஹாலிவுட் லெவலுக்கு தயாராகும் இந்தியன்-2

kamal-indian 2
kamal-indian 2

இதை வைத்து பார்க்கும் பொழுது கமல் விக்ரம் வசூலை எல்லாம் தூக்கி சாப்பிடும் அளவுக்கு இந்தியன் 2-க்காக உழைத்துக் கொண்டிருப்பது தெரிகிறது. அதனாலேயே இந்த வயதிலும் அவர் சண்டைக் காட்சிகளுக்காக அதிக ரிஸ்க் எடுக்கிறாராம். இதுவே ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில் படத்தின் அடுத்தடுத்த அப்டேட்டுக்காகவும் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

Also read: வயது மீறிய உறவால் நாட்டையே விட்டு ஓடிய ஹீரோ.. கமல் போல் 5 வயதில் நடிக்க வந்தவருக்கு கிடைத்த நோயாளி பட்டம்

Trending News