ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

24 வருட காதல் மனைவியுடன் 15 வயதில் SK எடுத்த புகைப்படம் இப்ப வைரல்.. அப்பவே லாக் பண்ணிட்டாரு மனுஷன்

Small age of sivakarthikeyan and wife photo: சிவகார்த்திகேயன் படங்கள் என்றாலே அதிக எதிர்பார்ப்புடன் எந்தவித சங்கடமும் இல்லாமல் குடும்பத்துடன் பார்க்கும் படியாக தான் கதையைத் தேர்ந்தெடுத்து நடிப்பார். அதனாலயே இவருடைய படங்கள் மக்களிடம் அமோக வரவேற்பை பெற்று விடும். அந்த வகையில் தற்போது ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் கமல் தயாரிப்பில் அமரன் படத்தில் ராணுவ வீரராக நடித்து வருகிறார்.

இதுவரை நடித்த படங்களின் கதை விட ரொம்பவே வித்தியாசமாகவும் அடுத்த லெவல் கட்டத்திற்கு போவதற்கு ஒரு தரமான கதையில் நடித்து வருகிறார். இந்நிலையில் இவருடைய சிறு வயது புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் இவருடைய மனைவி ஆர்த்தியும் இருக்கிறார். அதாவது கிட்டத்தட்ட 24 வருடங்களுக்கு முன் சிவகார்த்திகேயன் மற்றும் அவருடைய மனைவி ஆர்த்தி இருவரும் சேர்ந்து எடுத்த புகைப்படம்.

மேலும் அந்தப் போட்டோவில் சிவகார்த்திகேயனை பார்ப்பதற்கு கிட்டத்தட்ட 15 வயசு இருப்பதாக தெரிகிறது. அத்துடன் இவருடைய மனைவி ஆர்த்திக்கு பத்து வயது இருக்கும். இவர்கள் இருவரும் நெருங்கிய உறவினர்கள் என்பதால் அப்பவே காதலிக்க ஆரம்பித்து விட்டார். அந்த வகையில் காதலித்த காதலியை கைவிடாமல் கல்யாணமும் பண்ணிக்கிட்டு தற்போது இரு குழந்தைகளுடன் குடும்ப நடத்தி சந்தோஷமான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்.

Also read: அமரன் ரிலீசுக்கு நாள் குறித்த படக்குழு.. சென்னையில் டூயட் ஆட தயாராகிய சிவகார்த்திகேயன்

சிறு வயது முதலே இவர்கள் இருவரும் ஒன்றாக பழகி வந்ததால் ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு தற்போது வரை மனம் ஒத்தும் தம்பதிகளாக இருக்கிறார்கள். இவள் தான் எனக்கான துணைவி என்று 15 வயதிலேயே இவருடைய மனைவியை தந்திரமாக லாக் செய்து விட்டார். ஆரம்பத்தில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக இல்லாமல் தொகுப்பாளராகவும் நகைச்சுவையும் பண்ணிட்டு வந்தார்.

sk small age photo
sk small age photo

அந்த நேரத்தில் கூட இவர் மீது இருந்த நம்பிக்கையும் காதலையும் மனதிற்குள் வைத்து சிவகார்த்திகேயனின் நம்பி ஆர்த்தி திருமணம் செய்தது எந்த விதத்திலும் வீண் போகலை என்று சொல்வதற்கு ஏற்ப தற்போது வாழ்க்கையில் ஜெயித்து சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார்கள்.

Also read: கமல், பாக்கியராஜ் செய்த தில்லாலங்கடி வேலை.. வசமாக சிக்கிக்கொண்ட சிவகார்த்திகேயன்

Trending News