Sivakarthikeyan Family Photos: சிவகார்த்திகேயன் தற்போது முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். அவருடைய நடிப்பில் மாவீரன் மற்றும் அயலான் படங்கள் உருவாகி இருக்கிறது. சயின்ஸ் பிக்சன் கதை களத்தில் உருவாகியுள்ள அயலான் படம் இன்னும் சில மாதங்களில் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.
மேலும் மாவீரன் படம் வருகின்ற ஜூலை 14ஆம் தேதி திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாக இருக்கிறது. இப்போது இந்த படத்தின் ப்ரோமோஷனுகாக சிவகார்த்திகேயன் வெளிநாட்டுக்கு சென்றுள்ளார். பிரின்ஸ் பட தோல்வியால் துவண்டு போன சிவகார்த்திகேயன் மாவீரன் படம் கண்டிப்பாக வெற்றி கொடுக்கும் என்ற உறுதியில் இருக்கிறார்.
Also Read : மாவீரன் படத்தில் சிவகார்த்திகேயனின் சம்பளம்.. இவ்வளவுதானா?
இந்நிலையில் தொடர்ந்து படப்பிடிப்பில் பிஸியாக இருந்த சிவகார்த்திகேயன் இப்போது குடும்பத்துடன் நேரத்தை செலவிட்டு வருகிறார். அந்த வகையில் ஃபேமிலியாக போட்டோ சூட் எடுத்து இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
சிவகார்த்திகேயன் சினிமாவுக்கு வருவதற்கு முன்பே அவருடைய உறவினர் பெண்ணான ஆர்த்தியை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஆராதனா என்ற மகள் உள்ள நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன் ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. இந்நிலையில் ஆராதனா சிவகார்த்திகேயன் சில படங்களில் பாடல்களும் பாடியிருக்கிறார்.
குடும்பத்துடன் நேரத்தை செலவிடும் சிவகார்த்திகேயன்

Also Read : குருநாதா நீங்க இப்படி பண்ணலாமா? ப்ளூ சட்டை போட்ட பதிவால் ஆடிப் போன மாவீரன் தயாரிப்பாளர்
இந்த சூழலில் தற்போது உள்ள சிவகார்த்திகேயனின் குடும்ப புகைப்படங்களை பார்த்து ஆராதனா இவ்வளவு பெரிய பெண்ணாக வளர்ந்து விட்டாரா என்று ஆச்சரியத்தில் உறைந்துள்ளனர். இந்நிலையில் மாவீரன் படத்திற்காக ரசிகர்கள் காத்திருந்த நிலையில் இந்த புகைப்படங்கள் டபுள் ட்ரீட்டாக அமைந்துள்ளது.
சிவகார்த்திகேயன் ஃபேமிலியாக போட்டோ சூட்

ஆராதனா சிவகார்த்திகேயன்

Also Read : எமனே தவறு செய்தாலும் தட்டிக் கேட்பேன்.. மிரட்டும் சிவகார்த்திகேயனின் மாவீரன் ட்ரெய்லர்