புதன்கிழமை, ஜனவரி 22, 2025

டாப் ஹீரோக்கள் படங்களின் பிரபலம் மரணம்.. சோகத்தில் மூழ்கிய திரை உலகம்

சினிமாவில் டாப் ஹீரோக்களாக இருக்கக்கூடிய ரஜினி மற்றும் கமல் படங்களின் பிரபலம் மரணம் அடைந்திருப்பது திரை உலகத்தினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. ஆரம்ப காலத்தில் இருந்தே படங்களில் கதைக்கு எந்த அளவிற்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்களோ அதே அளவிற்கு ஹீரோ மற்றும் வில்லன்களுக்கு இடையே நடைபெறும் சண்டை காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றனர். 

இதனைத் தொடர்ந்து எல்லாக் காலகட்டங்களிலும் திரைப்படம் என்றால் சண்டை காட்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றனர். இதில் எம்ஜிஆர் முதல் அஜித், விஜய் வரை உள்ள டாப் ஹீரோக்களுடைய படங்களில் சண்டை பயிற்சியாளராக பணியாற்றியவர் தான் ஜூடோ கே கே ரத்தினம்.

Also Read: ரஜினியை மனுசனாக மாற்றிய பிரபல பாடகி.. மேடைப்பேச்சில் அசர வைத்த சூப்பர் ஸ்டார்

அந்த வகையில் எல்லா படங்களிலும் சண்டைக் காட்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. இவர் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என 1500 திரைப்படங்களுக்கு மேல் ஸ்டன்ட் மாஸ்டராக பணிபுரிந்துள்ளார். தற்பொழுது 93 வயதாகும் ஜூடோ கே கே ரத்தினம் அவர்கள் உடல் நலக்குறைவால் மரணமடைந்துள்ளார்.

இவர் 1959 ஆம் ஆண்டில் வெளியான தாமரைக் குளம் படத்தில் ஹீரோவாக அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து 1966 ஆம் ஆண்டு வெளியான வல்லவன் ஒருவன் திரைப்படத்தில் ஸ்டன்ட் மாஸ்டர் ஆக தனது பயணத்தை தொடங்கினார். ஒரு சில படங்களில் மட்டுமே நடித்துள்ள இவர் அதிகமான படங்களுக்கு சண்டை பயிற்சியாளராக பணியாற்றியதன் மூலம் ஜாம்பவானாகவே திகழ்ந்து வந்தார். 

Also Read: கமலை காட்டிலும் ரஜினி எவ்வளவோ மேல்.. மேடையில் கிழித்து தொங்க விட்ட பிரபலம்

இந்நிலையில் இறுதியாக சுந்தர் சி நடிப்பில் வெளியான தலைநகரம்  திரைப்படத்தில் வில்லனாக நடித்த அசத்தியிருப்பார். இவர் சினிமாவில் நடிகர் மற்றும் சண்டை பயிற்சியாளராக மட்டுமில்லாமல் 1980 ஆம் ஆண்டு வெளியான ஒத்தையடி பாதையிலே என்னும் திரைப்படத்தின் மூலம் தயாரிப்பாளராகவும் அவதாரம் எடுத்துள்ளார்.

இந்நிலையில் 1000க்கும் மேற்பட்ட படங்களுக்கு சண்டை பயிற்சியாளராக பணியாற்றி உலக சாதனை படைத்துள்ளார். தொடர்ந்து 2013 ஆம் ஆண்டு இவர் உலக கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றிருந்தார். இந்நிலையில் வயது மூப்பு காரணமாக ஜூடோ கே கே ரத்தினம் அவர்கள் தனது 93 வயதில் மரணமடைந்துள்ளார். இந்த செய்தியை கேட்டு திரையுலகம் முழுவதும் சோகத்தில் ஆழ்ந்துள்ளது. அதிலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நேரில் சென்று இரங்கல் தெரிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது. அவருடைய மறைவிற்கு திரை பிரபலங்கள் நேரில் சென்று தங்களது அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Also Read: முதல் நாளே 100 கோடி வசூல் செய்த 7 படங்கள்.. ஷாருக்கானுக்கு முன்பே சாதித்த நம்ம சூப்பர் ஸ்டார்

Trending News