ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 29, 2024

நெல்சன், அட்லீயை தொடர்ந்து சர்ச்சையில் சிக்கிய லோகேஷ்.. லியோ படத்தின் போஸ்டர் காப்பியா?

Leo Poster Copy Issue: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், திரிஷா மற்றும் பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் லியோ. இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகி இருக்கிறது. இதில் ரத்தம் தெறிக்க சுத்தியலுடன் விஜய் மாஸ் காட்டி இருக்கிறார். மேலும் இதற்கு பின்னால் ஓநாய் இடம் பெற்றிருந்தது.

காலை முதலே இந்த போஸ்டரை தளபதி ரசிகர்கள் இணையத்தில் கொண்டாடி வருகிறார்கள். மேலும் முதல் சிங்கள் வெளியாவதற்கான போஸ்டர் வெளியிடும்போது அல்டர் ஈகோ என குறிப்பிடப்பட்டிருந்தது. இதனால் தனது அடையாளத்தை மறைத்துக் கொண்டு வேறு ஒருவராக வாழ்வதாக பொருள்.

Also Read : உச்சாணி கொம்பில் சென்றதால் தலைக்கனத்துடன் ஆடும் லோகேஷ்.. கெஞ்சி கூத்தாடும் தயாரிப்பாளர்கள்

ஆகையால் லோகேஷ் இதில் வேற லெவலில் சம்பவம் செய்துள்ளார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இப்போது புது சர்ச்சையாக லியோ படத்தின் போஸ்டர் காப்பி என்று கூறப்படுகிறது. ஏற்கனவே நெல்சனின் ஜெயிலர் படத்தின் போஸ்டர் காப்பி என சர்ச்சைக்கு உள்ளானது.

அடுத்தபடியாக அட்லீ பொதுவாக மற்ற படங்களை காப்பியடித்து தான் தன்னுடைய படங்களை எடுத்து வருகிறார் என்ற பேச்சு எப்போதும் இருந்து வருகிறது. அதேபோல் ஜவான் போஸ்டர் மற்றும் வீடியோ வெளியான போது இந்த பிரச்சனை வெடித்தது. ஆனால் லோகேஷ் இதுபோன்று தற்போது வரை ஒரு பிரச்சனையை சந்தித்து வராத நிலையில் லியோ படத்தின் மூலம் ஏற்பட்டுள்ளது.

Also Read : வாய்ப்பும், வெற்றியும் எளிதாய் கிடைத்ததால் வரும் கர்வம்.. லோகேஷ், எச். வினோத் அடாவடி பேச்சு

அமெரிக்கா வெப் தொடரான கேம் ஆப் த்ரோன்ஸ் என்ற படத்தின் போஸ்டர் டிசைன் லியோ படத்தின் போஸ்டருடன் ஒத்துப் போகிறது. இந்த தொடரில் கிட் ஹாரிங்டன் என்பவர் ஜான் ஸ்னோ என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவர் அந்த போஸ்டரில் கத்தியுடன் நிற்கும் போது பின்னால் இதே போல் ஓநாய் ஓலமிடும்.

இப்போது இந்த இரண்டு போஸ்டரையும் இணைத்து வைத்து லியோ படத்தையும், லோகேஷையும் அஜித் ரசிகர்கள் கிண்டல் அடித்து வருகிறார்கள். மேலும் போஸ்டரை காப்பி என்றால் லியோ படம் எந்த படத்தின் காப்பி என நக்கல் அடிக்கின்றனர். இதற்கு படக்குழு தரப்பில் இருந்து என்ன பதில் வருகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

leo-poster-copied
leo-poster-copied

Also Read : அவரைப் பார்த்து கேடுகெட்ட பழக்கத்தை விட்ட வெற்றிமாறன்.. திரும்ப சொல்லிக் கொடுக்கும் லோகேஷ்

Trending News