செவ்வாய்க்கிழமை, நவம்பர் 19, 2024

எவ்வளவோ போராடியும் தோல்வியடைந்த டி ராஜேந்தர்.. சிம்பு படத்தால் வந்த வினை

அரசியல் போலவே சினிமாவிலும் வாரிசுகளுக்கு வாய்ப்பு கிடைப்பது சுலபம்தான். ஆனால் அதை தக்க வைத்துக்கொள்வது மிகவும் கடினமான ஒன்றாகும். அவ்வாறு டி ராஜேந்தர் மகன் சிம்பு குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமானார்.

அதன்பிறகு பல வெற்றி படங்களை கொடுத்து அனைவராலும் அறியப்படும் நடிகராக மாறினார். ஆனால் சிம்பு என்றாலே சர்ச்சை என்ற அளவிற்கு பல சர்ச்சைகளில் சிக்கினார். அப்போதெல்லாம் அவருக்கு துணையாக இருந்தது அவருடைய தந்தை டி ராஜேந்தர் தான்.

மேலும் சிம்புவின் சினிமா கேரியரிலும் பல பிரச்சனைகள் வரும் பொழுது தூணாக நின்ற டி ராஜேந்திரன் சமாளித்துள்ளார். சிம்புக்கு கடைசியாக வெளியான மாநாடு படத்தையே அதற்கு எடுத்துக்காட்டாக கூறலாம். படம் வெளியாவதில் மிகப்பெரிய சிக்கல் இருந்தது.

இப்படத்தின் தயாரிப்பாளர் சொன்ன தேதியில் படத்தை ரிலீஸ் செய்ய மாட்டேன் என உறுதியாக இருந்தார். ஆனால் டி ஆர் நீதிமன்றம் வரை சென்று படத்தின் ரிலீசுக்காக போராடினார். மேலும் மாநாடு படம் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹட் ஆனது. சிம்பு தொடர்ந்து தோல்வி படங்களை கொடுத்து வந்த நிலையில் மாநாடு படம் சிம்புவின் மார்க்கெட்டை உயர்த்தியது.

இவ்வாறு தன் மகனின் நல்லது, கெட்டது என அனைத்து விஷயங்களிலும் டிஆர் தான் துணையாக உள்ளார். இந்நிலையில் உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு மே 1ஆம் தேதி எல்லா தொலைக்காட்சிகளும் போட்டி போட்டுக்கொண்டு இந்த ஆண்டு வெளியான படங்களை ஒளிபரப்பு செய்தது.

அதில் விஜய் டிவி மாநாடு படத்தை ஒளிபரப்பு செய்தது. ஆனால் டிஆர், விஜய் டிவியில் மாநாடு படத்தை ஒளிபரப்பு செய்யக்கூடாது என பெரிதும் தடுக்க முயன்றார். ஆனால் அதையும் மீறி விஜய் டிவி மாநாடு படத்தை டெலிகாஸ்ட் செய்து டிஆர்பியை எகிற செய்தது.

விஜய் டிவி ஒரு படத்தை ஒளிபரப்பு செய்தால் தொடர்ந்து அதையே மீண்டும் மீண்டும் டெலிட் செய்து அந்தப் படத்தின் மீது மக்களுக்கு வெறுப்பு அடையச் செய்துவிடுவார்கள். அப்படித்தான் கும்கி, நண்பன், எங்கேயும் எப்போதும் போன்ற படங்களைத் தொடர்ந்து ஒளிபரப்பு செய்து ரசிகர்களை சலிப்படையச் செய்தார்கள். இதனால்தான் விஜய் டிவிக்கு மட்டும் மாநாடு படத்தை கொடுக்காதீர்கள் என ஆரம்பத்திலேயே டி ஆர் பிரச்சினை செய்துள்ளார்.

- Advertisement -spot_img

Trending News