ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 19, 2025

சிவகார்த்திகேயனிடம் சம்பளம் வாங்காமல் நடிக்க சொன்ன தயாரிப்பாளர்.. மருத்துவமனையில் அட்மிட் ஆகியும் கண்டுக்காத SK

Sivakarthikeyan: பணமும் வசதியும் வந்து விட்டால் ஒருவருடைய இயல்பான குணம் மாறிவிடும் என்பதற்கு உதாரணமாக சிவகார்த்திகேயன் மீது தொடர்ந்து குற்றச்சாட்டுகள் வந்து கொண்டே இருக்கிறது. எந்த புற்றில் என்ன பாம்பு இருக்கிறது என்று தெரியாது. அதுபோல சிவகார்த்திகேயனா இப்படி என்று சொல்லும் அளவிற்கு சமீபத்தில் இமான் மனைவி பிரச்சினையில் சிக்கிக்கொண்டார்.

இதையெல்லாம் சரி செய்யும் விதமாக படத்தில் முழு கவனத்தையும் செலுத்தி அயலான் படத்தை வெளியிட்டார். ஆனால் படம் எதிர்பார்த்த அளவுக்கு வசூலில் கல்லா கட்டவில்லை. இதனால் இப்படத்தின் தயாரிப்பாளர் கொட்டபாடி ஜே. ராஜேஷ் பெறும் ஏமாற்றத்தில் இருக்கிறார். ஏற்கனவே சிவகார்த்திகேயனை வைத்து ஹீரோ படத்தை இவர்தான் தயாரித்தார்.

ஆனால் இரண்டுமே நஷ்டமாக தலையில் துண்டு போடும் அளவிற்கு தயாரிப்பாளரை முக்காடு போட வைத்துவிட்டது. இதையெல்லாம் எப்படி ஈடுகெட்ட என்று யோசித்த தயாரிப்பாளர் கடைசியாக எடுத்த ஒரு முடிவு அயலான் 2. ஆனால் இதில் தான் ஒரு இடியை தூக்கி சிவகார்த்திகேயன் தலையில் வைத்திருக்கிறார்.

Also read: மசாஜ் சென்டரால் சிக்கிய சிவகார்த்திகேயன்.. அந்த மாதிரி தொழிலா.? பயில்வான் கிளப்பிய சர்ச்சை

அதாவது சிவகார்த்திகேயன் இடம் எந்தவித கேள்வியும் கேட்காமல் அயலான் 2 படம் வரும் என்று அறிவிப்பை வெளியிட்டார். அத்துடன் இந்தப் படத்திற்காக நீங்கள் சம்பளம் வாங்காமல் ஃப்ரீயா நடித்துக் கொடுக்க வேண்டும் என்று சொல்லி இருக்கிறார். இதை எதிர்பார்க்காத சிவகார்த்திகேயன் ரொம்பவே டென்ஷன் ஆகிவிட்டார்.

அத்துடன் இவரிடம் இருந்து சரியான பதில் வராததால் தயாரிப்பாளருக்கு உடல் அளவில் பிரச்சனை வந்துவிட்டது. தற்போது இவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அட்மிட் ஆகி இருக்கிறார். இந்த செய்தியை தெரிந்தும் சிவகார்த்திகேயன் அவரை மருத்துவமனையில் போய் பார்க்கவில்லை. அதற்கு காரணம் எப்படி ஒரு படத்திற்கு சம்பளமே வாங்காமல் நடித்துக் கொடுக்க முடியும் என்ற கோபம் தான்.

ஆனால் தயாரிப்பாளர் நினைத்தது என்னவென்றால் சிவகார்த்திகேயனை வைத்து எடுத்த இரண்டு படமும் நஷ்டமானதால் ஒரு படத்தில் ஃப்ரீயாக நடிக்க வேண்டும் என்ற லாஜிக் படி கேட்டிருக்கிறார். இவரிடத்தில் இருந்து யோசிக்கும் பொழுது இதுவும் தவறாக தெரியவில்லை. ஆக மொத்தத்தில் இந்த பஞ்சாயத்து எங்கு கொண்டு போய் முடியப் போகுதோ.  சிவகார்த்திகேயனுக்கு இப்போது நேரம் சரி இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.

Also read: மீண்டும் கடனாளியான சிவகார்த்திகேயன்.. ஏலியன் கூடவே போயிற வேண்டியதான்

Trending News