செவ்வாய்க்கிழமை, ஜனவரி 7, 2025

அஜித் வேண்டாம், சிவகார்த்திகேயனுக்கு கிரீன் சிக்னல் போட்ட தயாரிப்பாளர்.. சம்பளத்தை பற்றி மூச்சு விடாத SK

Actor Sivakarthikeyan Next Movie Update: தமிழ் சினிமாவில் அசுர வளர்ச்சியடைந்து கொண்டிருக்கும் நடிகர் தான் சிவகார்த்திகேயன். இவரை வைத்து தான் பிரபல தயாரிப்பு நிறுவனம் அடுத்த படத்தை எடுக்க திட்டமிட்டுள்ளது. ஆனால் இதற்கு முன்பு அஜித்தை வைத்து எடுக்க நினைத்தனர். ஆனா அஜித் 160 கோடி சம்பளம் கேட்பதால் அவ்வளவு சம்பளம் கொடுக்க அவர்களால் முடியாது என்று டாட்டா காட்டிவிட்டது அந்த தயாரிப்பு நிறுவனம்.

இப்போது சிவகார்த்திகேயனின் அமரன் படம் முடிந்த பிறகு அடுத்த ப்ராஜெக்ட்டுக்கு ஓகே சொல்லி இருக்கிறது சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம். நடிகர் சிவகார்த்திகேயனும் இயக்குனர் வெங்கட் பிரபு இருவரும் ஒரு படத்தில் இணைய இருக்கின்றனர். இந்த படத்தை தான் சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கிறது.

தற்போது வெங்கட் பிரபு விஜய்யை வைத்து ‘தி கோட்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தை முடித்த பிறகு வெங்கட் பிரபு அடுத்ததாக சிவகார்த்திகேயனை வைத்து தான் படம் இயக்கப் போகிறார். இந்த படம் இதுவரை சிவகார்த்திகேயன் சினிமா கேரியரில் உருவாகாத வகையில் பிரம்மாண்ட பட்ஜெட்டில் படத்தை எடுக்க திட்டமிட்டுள்ளனர்.

Also Read: குட் பை சொல்லும் விஜய், தத்தளிக்கும் விடாமுயற்சி.. கல்லா கட்ட திசை திரும்பும் தியேட்டர்கள்

அஜித்தை விட்டுட்டு சிவகார்த்திகேயனை லாக் செய்த சத்யஜோதி பிலிம்ஸ்

அதற்கான பேச்சுவார்த்தை தான் தற்போது மும்மரமாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் சம்பளத்தைக் கூட வேண்டாம், பிறகு பார்த்துக்கலாம் என்று சிவகார்த்திகேயன் கூறிவிட்டார். இவ்வளவு வேண்டும் அவ்வளவு வேண்டும் என்று கூறாமல் சம்பளத்தை அப்புறம் பார்த்துக் கொள்ளலாம் என்று கூறியிருக்கிறார்.

இந்த ஒரு விஷயத்தாலேயே சத்யஜோதி பிலிம்ஸ் சிவகார்த்திகேயனுக்கு கிரீன் சிக்னல் காட்டிவிட்டது. ஆனால் சிவகார்த்திகேயனின் அமரன் படம் ரிலீஸ் ஆன பிறகு தன்னோட மார்க்கெட் இன்னுமே உயரும் என்பதால், அந்த சமயத்தில் சம்பளத்தை அதிகமாக கேட்டுக் கொள்ளலாம் என்பதுதான் அவருடைய பிளான். அதனால் தான் இப்போது சம்பளத்தை பற்றி மூச்சு விடாமல் இருக்கிறார்.

Also Read: சிவகார்த்திகேயனால் லலித்துக்கு வந்த ஆப்பு.. அடம்பிடித்து கறாராய் தனுஷ் செய்யும் அக்கப்போரு!

Trending News