Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்
ADVERTISEMENT

தனுஷ், தான் போட்ட விதைக்கு காசு கேட்டா தப்பா?. ரைட்டு தான் இருந்தாலும், கணக்கு எங்கயோ இடிக்குதே!

தனுஷ், தான் போட்ட விதைக்கு காசு கேட்டா தப்பா?. ரைட்டு தான் இருந்தாலும், கணக்கு எங்கயோ இடிக்குதே!

Dhanush: தனுஷ் நெருங்கிய நண்பன் வெற்றிமாறனுக்கு துரோகம் செய்துவிட்டார். இந்த கதை தான் காலையில் இருந்து சமூக வலைத்தளத்தை மிரட்டிக் கொண்டிருக்கிறது. வடசென்னை கதை தழுவலை வைத்து வெற்றி மாறன் சிம்புவுடன் இணைந்து ராஜன் வகையறா என்ற படத்தை […]

Dhanush: தனுஷ் நெருங்கிய நண்பன் வெற்றிமாறனுக்கு துரோகம் செய்துவிட்டார். இந்த கதை தான் காலையில் இருந்து சமூக வலைத்தளத்தை மிரட்டிக் கொண்டிருக்கிறது. வடசென்னை கதை தழுவலை வைத்து வெற்றி மாறன் சிம்புவுடன் இணைந்து ராஜன் வகையறா என்ற படத்தை எடுக்கிறார்.

இந்த படத்தின் ப்ரோமோ சூட் முடிந்த பிறகு வடசென்னை படத்திற்கு NOC கொடுக்க தனுஷ் இருபது கோடி கேட்கிறார். சிம்பு மீது இருக்கும் பகை தான் இதற்கு காரணம் என கிளப்பி விடப்படுகிறது. இதைத் தாண்டி தனுஷ் தரப்பில் இருந்து இந்த விஷயத்தை அலசி பார்க்க வேண்டும்.

கணக்கு எங்கயோ இடிக்குதே!

பொல்லாதவன் படத்தில் தனுஷ் மற்றும் வெற்றிமாறன் இணைவதற்கு முன்பே இருவரும் போட்ட திட்டம் தான் வடசென்னை படம். அந்த சமயத்தில் பொருளாதார சிக்கலால் இந்த படத்தை எடுக்க முடியவில்லை.

அதன் பின்னர் இருவரும் சேர்ந்து அவர்களுடைய கனவு படமான வடசென்னை படத்தை எடுத்து 200 கோடிக்கு மேல் வசூல் பார்த்தார்கள். இந்த படத்தின் தயாரிப்பாளர் தனுஷ் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது வடசென்னை படத்தில் வந்த ராஜன் என்ற கேரக்டரை மட்டும் தனியாக எடுத்து சிம்புவை வைத்து படம் பண்ணப் போகிறார் வெற்றி. இந்த படத்தை தயாரிக்கப் போவது வேறொரு தயாரிப்பாளர்.

இந்த கேரக்டருக்கு தமிழ் சினிமா ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு இருப்பதால் கண்டிப்பாக இந்த படம் அதிக லாபம் தான். அப்படி இருக்கும் போது தன்னுடைய தயாரிப்புக்கு சொந்தமான கதை மீது தனுஷ் NOC கொடுக்க காசு கேட்பதில் எந்த தவறும் இல்லை.

அதிலும் தற்போது அவருடைய தயாரிப்பு நிறுவனம் ஒன்று பார் ஒரு சில படங்களால் நஷ்டத்தை சந்தித்தது, அதற்கு ஈடுகட்ட கூட இது போன்ற விஷயங்களை அவர் கையாளலாம். இருந்தாலும் படத்தின் ப்ரோமோ சூட் எடுத்த பிறகு காசு கேட்பதுதான் தர்ம சங்கடமான சூழ்நிலை.

தனுஷ் இருக்கும் பிசியான சூழ்நிலைக்கு 2028 வரை அவரால் வடசென்னை 2 எடுக்க கால்ஷீட் கொடுக்க முடியாது. அப்படி இருக்கும்போது தன்னுடைய நெருங்கிய நண்பருக்காக இதை செய்து ராஜன் வகையறா படம் உருவாக தனுஷ் தான் உதவி இருக்க வேண்டும்.

வெற்றிமாறனாக இருந்த போதும் தனுஷ் இப்படி ஒரு விஷயத்தை கையாளுவதால் சிம்புவின் மீது இருக்கும் பகையை தீர்த்துக் கொள்கிறார் என்று தான் தோன்றுகிறது.

A

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.