திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

மாலத்தீவுக்கு போயிட்டு வந்தபின் ரஜினிக்கு கிடைத்த மன நிம்மதி.. நெல்சனை கட்டி தழுவ இதுதான் முக்கிய காரணம்

Jailer Rajini: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த சில நாட்களுக்கு முன்பு மாலத்தீவுக்கு சென்று இருந்தார். எப்போதுமே இமயமலை செல்லும் ரஜினி இந்த முறை மாலத்தீவுக்கு சென்றதற்கான காரணம் மன நிம்மதி இல்லாமல் இருப்பதாக கூறப்படுகிறது. அதாவது தன் நடித்த ஜெயிலர் படம் எப்படி இருக்குமோ என்ற சந்தேகம் ரஜினிக்கு வந்துள்ளது.

அதோடு மட்டுமல்லாமல் தனது மூத்த மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் திருமண வாழ்க்கையும் இவ்வாறு கேள்விக்குறியாக இருப்பதால் மிகுந்த மன கஷ்டத்தில் இருந்திருக்கிறார். இதற்காகத்தான் மாலத்தீவுக்கு மிகவும் சோகத்துடன் ரஜினி போயிருந்தார். இது பற்றி நிறைய செய்திகளும் இணையத்தில் வெளியாகி இருந்தது.

Also Read : நீலாம்பரி முன் அசிங்கப்பட்டதை ஒப்புக்கொண்ட ரஜினி.. என்னதான் சொல்லு தலைவருக்கு நிகர் அவர் மட்டும்தான்

ஆனால் இப்போது செம குஷியில் இருக்கிறார். இந்த இடைப்பட்ட காலத்தில் என்ன நடந்திருக்கிறது என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. அதாவது ரஜினி ஐஸ்வர்யாவின் வாழ்க்கையில் முக்கிய முடிவு ஒன்று எடுத்துள்ளாராம். இதனால் அவர்களது குடும்பப் பிரச்சனை தீர்வுக்கு வரவுள்ளது என கூறப்படுகிறது.

இது ஒரு புறம் இருக்க ஜெயிலர் படத்தின் சென்சார் போர்டில் இருந்து வந்த சர்டிபிகேட் ரஜினியை குஷிப்படுத்தி இருக்கிறது. அதாவது அந்தக் குழுவில் இருந்து ஒருவர் ரஜினிக்கு போன் செய்து ஜெயிலர் படத்திற்கு நல்ல விமர்சனம் கொடுத்துள்ளாராம். படக்குழு தரப்பிலிருந்து ஜெயிலர் படத்தை எத்தனை தடவை பார்த்துவிட்டு விமர்சனம் கொடுத்தாலும் அது சந்தோஷத்தை ஏற்படுத்தாது.

Also Read : சூப்பர் ஸ்டார் பட்டத்தை துச்சமாக நினைத்து தூக்கி எறிந்த ரஜினி.. நம்பர் ஒன் யாரு, சர்ச்சைக்கு வச்ச முற்றுப்புள்ளி

இந்த படத்திற்கு சம்பந்தமே இல்லாத மூன்றாவது நபர் ஒருவர் கொடுத்தால் தான் இதன் உண்மை நிலவரம் தெரியவரும். அப்படி சென்சார் போர்டில் இருந்து ஒருவர் ஜெயிலர் படத்தை புகழ்ந்து பேசியதால் ரஜினி குதூகலம் ஆகிவிட்டாராம். அதே சந்தோஷத்துடன் நேற்று ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார்.

மேலும் இந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக நெல்சனை கட்டிப்புடிச்சு தழுவி முத்தம் கொடுத்து இருந்தார். அதுமட்டுமின்றி மேடையில் நெல்சன் பற்றி ஆகா ஓகோ என்று சூப்பர் ஸ்டார் புகழ்ந்து தள்ளி இருந்தார். இதன் மூலம் ஜெயிலர் படம் 100 சதவீதம் உறுதி என்ற நம்பிக்கையில் ரஜினி இருக்கிறாராம்.

Also Read : விஜய்யால் நெல்சனுக்கு ஏற்பட்ட கடும் நெருக்கடி.. தயாரிப்பாளரிடம் ரஜினி சொன்ன ஒத்த வார்த்தை

Trending News