ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

நயன்தாரா பிரபுதேவாவை தூக்கி எறிய காரணம் இதுதான்.. விக்னேஷ் சிவனிடம் இருக்கும் நல்ல குணம்

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பரிச்சயமான நடிகையாக இருப்பவர் நயன்தாரா. இவரது நடிப்பில் வெளியான படங்கள் சமீபகாலமாக நல்ல வரவேற்பை பெற்றாலும் இவரைச் சுற்றி தொடர்ந்து பல்வேறு விதமான சர்ச்சைகள் எழுந்த வண்ணம் உள்ளன.

சமீபத்தில் கூட நயன்தாரா மற்ற தயாரிப்பின் படங்களுக்கு புரமோஷனுக்கு வருவதில்லை ஆனால் தன்னுடைய தயாரிப்பில் உருவான படங்களுக்கு புரமோஷனில் கலந்து கொள்வதாக குற்றம்சாட்டினர்.

நயன்தாரா முதன் முதலில் சிம்புவை காதலித்தார். இவர்கள் இருவருக்கும் இடையே நெருக்கம் ஏற்பட்டது மேலும் சிம்புவின் படங்களில் நயன்தாரா மிகவும் கவர்ச்சியாக நடிக்க ஆரம்பித்தார் காரணம் எப்படியும் சிம்பு தன்னை கல்யாணம் செய்து கொள்வார் என நினைத்தார். ஆனால் கடைசியாக இவர்கள் இருவரும் பிரிந்து விட்டனர்.

அதன் பிறகு நயன்தாரா பிரபுதேவாவை காதலித்து வந்தார். பொது மேடைகளில் கூட பிரபுதேவாவுடன் நயன்தாரா நடனம் ஆடினார். அந்த அளவுக்கு இவர்கள் இருவரும் நெருக்கமாக பழகி வந்தனர். ஆனால் சண்டை வரும்போதெல்லாம் பிரபுதேவா நயன்தாராவிடம் நீ சிம்புவை காதலி மற்றும் இவர்களுடைய விஷயங்களைப் பற்றி அடிக்கடி பேசியுள்ளார். இதனால்தான் நயன்தாரா-பிரபுதேவா விட்டு விலகினார்.

தற்போது நயன்தாரா விக்னேஷ் சிவனை காதலித்து வருகிறார். நயன்தாரா ஏற்கனவே சிம்பு, பிரபுதேவாவை காதலித்தார். ஆனால் தற்போது வரை விக்னேஷ் சிவன் நயன்தாராவிடம் இவர்களைப் பற்றி எந்த கேள்வியும் கேட்டதே கிடையாது. இந்த ஒரு நல்ல குணமுள்ள காரணத்தால் தான் தற்போது வரை  நயன்தாரா விக்னேஷ் சிவனை காதலித்து வருகிறார்.

Trending News