திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

நியாயமா ரெட் கார்டு இவங்களுக்கு தான் கொடுக்கணும்.. ஆண்டவர் சொல்லியும் கேட்காத அரைவேக்காடுகள்

Biggboss7: பிக்பாஸ் நிகழ்ச்சி 50 நாட்களைக் கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. அதில் இந்த சீசன் ஆரம்பத்தில் சுவாரஸ்யத்திற்கு பஞ்சமில்லாமல் இருந்தது. ஆனால் இப்போது பல எரிச்சல் ஊட்டும் விஷயங்கள் நடந்து வருகிறது. அதை பிக்பாஸ் மற்றும் கமல் இருவருமே கண்டுக்காமல் இருப்பது தான் ஏன் என்று தெரியவில்லை.

அந்த வகையில் ஆண்டவர் அடிக்கடி விதிமீறல் பற்றி கூறுவார். அதிலும் கடந்த வாரம் மாயா, பூர்ணிமா இருவரும் மைக்கை கழட்டி விட்டு ரகசியம் பேசுவதை அவர் கடுமையாக கண்டித்து இருந்தார். ஆனாலும் இந்த அரைவேக்காடுகள் அதை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை.

ஆண்டவரே சொன்னாலும் நாங்கள் கேட்க மாட்டோம் என இப்போதும் அதைத்தான் செய்து கொண்டிருக்கின்றனர். அப்படி என்னதான் காதுக்குள் ரகசியம் பேசுவார்களோ தெரியவில்லை. ஒன்று மைக்கை கழட்டி போட்டுவிட்டு பேசுவது. இல்லை என்றால் அதை மறைத்தபடி பேசுவது என இவர்கள் தொடர்ந்து விதிமீறல் செய்து வருகின்றனர்.

Also read: விசித்ரா போலவே மீடியா முன் சந்தி சிரிக்க வைத்த நாயகன் பட நடிகை.. என்ன ஆண்டவரே இதெல்லாம்.?

இதைத்தான் இப்போது ரசிகர்கள் கடுமையாக ஆட்சேபிக்கின்றனர். பிக்பாஸ் கொடுத்த எச்சரிக்கையையும் மீறி இவ்வளவு தூரம் அவர்கள் செல்கிறார்கள் என்றால் நிச்சயம் சப்போர்ட் இல்லாமலா இருக்கும். அதன்படி குழந்தையை கிள்ளிவிட்டு தொட்டிலை ஆட்டும் கதையாக தான் இது இருக்கிறது.

நியாயப்படி பார்த்தால் பிக் பாஸ் விதிமுறைகளை மீறிய இவர்களுக்கு தான் ரெட் கார்டு கொடுத்திருக்க வேண்டும். ஆனால் கூட்டாக சேர்ந்து பிரதீப்பை வெளியேற்றி விட்டார்கள் என ரசிகர்கள் இப்போது கொந்தளித்து வருகின்றனர். அதிலும் பூர்ணிமாவை தான் அதிகம் கழுவி ஊற்றி வருகின்றனர்.

அந்த அளவுக்கு அவருடைய பெயர் சோசியல் மீடியாவில் நாறி கிடக்கிறது. பொறாமை, வில்லத்தனம், மரியாதை இல்லாமல் பேசுவது என நாளுக்கு நாள் இவர் பெயர் டேமேஜ் ஆகி கொண்டு தான் இருக்கிறது. அந்த வகையில் தற்போது அவர் ஆடும் ஆட்டத்திற்கு கமல் நிச்சயம் ஒரு குட்டு வைக்க வேண்டும் என்பதே அனைவரின் கருத்தாக இருக்கிறது.

Also read: அத்தனையும் நாடகமா பேபி.? வனிதா மூஞ்ச ஒடச்சது யாரு.? சந்தேகத்தை கிளப்பிய 3 விஷயங்கள்

Trending News